டிரெஸ் மாற்றக்கூட விடமாட்டீங்களாப்பா? பிக்பாஸ் தமிழ் வீட்டில் அமுதவாணனின் அட்ராசிட்டி

ஷிவினை டிரெஸ் மாற்றவிடாமல் அமுதவாணனும், ராபர்ட் மாஸ்டரும் நடந்து கொண்ட விதம் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 11, 2022, 06:08 PM IST
டிரெஸ் மாற்றக்கூட விடமாட்டீங்களாப்பா? பிக்பாஸ் தமிழ் வீட்டில் அமுதவாணனின் அட்ராசிட்டி title=

பிக்பாஸ் தமிழ் வீடு நாளுக்கு நாள் போர்க்களமாக மாறி வருகிறது. இந்த வாரம் ஃபேக்ட்ரி டாஸ்க் நடந்து கொண்டிருக்கிறது. இதில் விக்ரமன் தலைமையில் ஒரு அணியும், தனலட்சுமி தலைமையில் ஒரு அணியும் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். காரசாரமாக நடைபெற்ற இந்த டாஸ்கில் சரியாக விளையாடாத போட்டியாளராக ஷிவின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு கிழவி வேடம் போட்டுக் கொண்டு வீட்டில் இருக்குமாறு பிக்பாஸ் தண்டனை வழங்கினார். 

மேலும் படிக்க | பிரபல நடிகரின் மனைவியை கட்டிப்போட்டு 250 சவரன் நகை கொள்ளை... வாட்ச்மேன் உடந்தையா?

இதனைத் தொடர்ந்து ஷிவின் டிரெஸ் மாற்றுவதற்காக டிரெஸ்ஸிங் ரூம் சென்றார். அவரை பின் தொடர்ந்து சென்ற ராபர்ட் மாஸ்டரும், அமுதவாணனும் ஷிவினை கிண்டலடித்தனர். டிரெஸ்ஸிங் ரூமில் உடை மாற்றுவதற்காக தயாராகிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த திரையை விலக்கி அவர்கள் ஷிவினை கலாய்த்துக் கொண்டிருந்தனர். அவர்களின் இந்த அணுகுமுறை ரசிகர்கள் மத்தியில் கோபத்தை உண்டாக்கியுள்ளது.

போட்டியாளர் டிரெஸ் மாற்றும் இடத்தில் சக பிக்பாஸ் போட்டியாளர்களான அமுதவாணனும், ராபர்ட் மாஸ்டரும் தொந்தரவு செய்தது அநாகரீகம். இதனை பிக்பாஸ் கண்டித்திருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. சக போட்டியாளர்களும் கண்டிக்கவில்லை என்பது வேடிக்கையாக இருப்பதாக ரசிகர்கள் ஆவேசமாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | ஆடை சர்ச்சை...வீடியோவில் பொய் சொன்ன சதீஷ் - பதிலடி கொடுத்த தர்ஷா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News