இந்த சீசன் பிக்பாஸ் போரடிக்குதப்பா; ரசிகர்களின் ரியாக்ஷன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் போரடிப்பதாக ரசிகர்கள் இணையத்தில் புலம்புகின்றனர்.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 5, 2022, 10:04 PM IST
  • பிக்பாஸ் குறித்து ரசிகர்களின் ரியாக்ஷன்
  • இந்த சீசன் போரடிப்பதாக கமெண்ட்
  • முந்தைய சீசன்போல் இல்லை எனவும் குமுறல்
இந்த சீசன் பிக்பாஸ் போரடிக்குதப்பா; ரசிகர்களின் ரியாக்ஷன்  title=

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 57 நாட்களை எட்டிவிட்டது. சாந்தி, அசல் கோளார், விஜே மகேஷ்வரி, ராபர்ட் மாஸ்டர் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த வீட்டை விட்டு வெளியேறி இருக்கின்றனர். இன்னும் சில வாரங்களில் இறுதிப் போட்டிக்கான ரேஸ் தொடங்க இருக்கும் நிலையில், வைல்டு கார்டு என்டிரியும் அரங்கேற இருக்கிறது. இதனை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தாலும், முன்பிருந்த விறுவிறுப்பு இந்த சீசனில் இல்லை என குறைப்பட்டு கொள்கின்றனர் ரசிகர்கள். பிக்பாஸ் சீசன் 1 ஆரம்பித்தபோது, தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது.

மேலும் படிக்க | Bigg Boss Tamil 6: தலைவர் பதவிக்கு போட்டா போட்டி, இப்படி ஒரு டாஸ்க் ஆ..

சிலர் தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரானது பிக்பாஸ், அதனால் அந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றெல்லாம் நீதிமன்ற படிகளில் ஏறினர். அந்த தடையை எல்லாம் உடைந்தெறிந்துவிட்டு அடுத்தடுத்த சீசன்களில் வெற்றி பயணத்தை தொடர்ந்தது பிக்பாஸ் தமிழ். மேலும், சீசனுக்கு சீசன் புதிய உச்சத்தையும் எட்டிவரும் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு அதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களும் ஒரு காரணம். சினிமா, சின்னத்திரை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பிரபலமாக இருக்கும் முகங்களை பிக்பாஸ் டீம் சரியாக பல்ஸ் பார்த்து களமிறக்கும்.

இந்த சீசனுக்கும் அதேபோல் நல்ல போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கு அனுப்பினாலும், முன்பிருந்த சீசன்களைப் போல் இல்லை என ரசிகர்கள் கமெண்ட் அடித்துள்ளனர். வீட்டிற்குள் நன்றாக விளையாடும் போட்டியாளர்கள் இருந்தாலும், ஏதோ ஒரு சுவாரஸ்யம் குறைவதாக தெரிவித்துள்ளனர். குயின்சியின் எலிமினேஷன் குறித்து கமெண்ட் அடிக்கும்போது, நிகழ்ச்சி குறித்த தங்களின் அபிப்ராயத்தை பதிவிட்டுள்ளனர். அதேநேரத்தில் பிக்பாஸ் சீசன் 6 தமிழை ரசிக்கும் போட்டியாளர்களும் அதிகளவில் இருக்கின்றனர்.

மேலும் படிக்க | பிரபல இசையமைப்பாளர் மகனுடன் சிவாங்கியின் ரொமான்ஸ் பாடல் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News