சமந்தாவின் 10th மார்க் இதோ... அதுவும் அவங்க டீச்சர் சொன்னதை பாருங்களேன்!

Samantha Report Card: சமந்தாவின் 10, 11ஆம் வகுப்பின் ரிபோர்ட் கார்டு புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், அதில் சமந்தாவின் ஆசிரியர்கள் அவர் குறித்து அதில் பாராட்டி தள்ளியுள்ளனர். 

Written by - Sudharsan G | Last Updated : Apr 27, 2023, 05:52 PM IST
  • சமந்தா நடிப்பில் சாகுந்தலம் படம் சமீபத்தில் வெளியானது.
  • எதிர்பார்த்த அளவிற்கு படம் வசூலை குவிக்கவில்லை.
  • சமந்தாவுக்கு என ஆந்திராவின் குண்டூரில் கட்டப்பட்ட கோயில் நாளை திறப்பு.
சமந்தாவின் 10th மார்க் இதோ... அதுவும் அவங்க டீச்சர் சொன்னதை பாருங்களேன்! title=

Samantha Report Card: நடிகை சமந்தாவின், ரசிகர்களின் எண்ணிக்கை மிகப்பெரியது. பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தாலும, 'தி ஃபேமிலி மேன்' படத்தில் தனது அட்டகாசமான நடிப்பு சமீபத்தில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். 'புஷ்பா' படத்தில் வரும் ஊம்... சொல்றியா மாமா... என்ற பாடலுக்கு, தனது அட்டகாசமான நடனம் மூலம் பலரின் இதயங்களையும் வென்றார். 

இந்நிலையில், அவரின் 10ஆம் வகுப்பு ரி-போர்ட் கார்டின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. சமந்தா எந்தளவு நல்ல நல்ல நடிகையோ, அதே அளவு பள்ளியிலும் நன்றாக படிக்கும் மாணவியாக இருந்திருக்கிறார் என அந்த புகைப்படத்தை பார்க்கும் போது தெரிகிறது. புகைப்படத்தில் காணப்படும் ரிப்போர்ட் கார்டு, சமந்தா உடையது என்று கூறப்பட்டு வருகிறது. ட்விட்டரில் வைரலாகி வரும் இந்த ரிப்போர்ட் கார்டின் புகைப்படத்தை இங்கு காணலாம். 

சமந்தாவின் மார்க்கை பாருங்கள்

இந்த ரிப்போர்ட் கார்டு பல ஆண்டுகளாக இணையத்தில் வலம் வந்துகொண்டிருக்கும் நிலையில், மீண்டும் இது வைரலாகியுள்ளது. இந்த ரிப்போர்ட் கார்டை,  சமந்தாவின் பேன் பேஜ் ஒன்று ட்விட்டரில் 2020ஆம் ஆண்டில் பகிர்ந்துள்ளது. சமந்தா நன்றாக படிக்கும் மாணவி என்பதை அறிய இந்த ரிப்போர்ட் கார்டு போதுமானதாகும். 

சமந்தா, ஒவ்வொரு பாடத்திலும் சராசரியாக 80 அல்லது 90 மதிப்பெண்கள் பெற்றார். இதுமட்டுமின்றி கணிதம் போன்ற பாடங்களிலும் சமந்தா 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இவர் வகுப்பில் பர்ஸ்ட் ராங்க் எடுக்கும் மாணவியாக வலம் வந்துள்ளார். அதுமட்டுமின்றி அவரின் 11ஆம் வகுப்பு ரிப்போர்ட் கார்டும் வெளிவந்துள்ளது. 

மேலும் படிக்க | டார்ச்சர் செய்த நாக சைதன்யா !கருக்கலைப்பு செய்தாரா சமந்தா? பிரபலம் வெளியிட்ட தகவல்

சமந்தா இந்தப் பள்ளியில் படித்து வந்தார்

சமந்தா சென்னை பல்லவாரத்தில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் ஸ்டீபன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை படித்துள்ளதாக தெரிகிறது. மேலும், 11ஆம் வகுப்பில் சென்னை தி.நகரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் உயர்நிலைப்பள்ளியில் படித்துள்ளார். சமந்தா, படிப்பு முதல் தொழில் வரை எல்லா இடங்களிலும் வெற்றியை ருசித்தவர். ரிப்போர்ட் கார்டில் நடிகையின் ஆசிரியரும் அவரைப் புகழ்ந்து மட்டுமின்றி, 'பள்ளியின் சொத்து' என்று வர்ணித்துள்ளார். சமந்தாவின் ரிப்போர்ட் கார்டை பார்த்து அவரது ரசிகர்களும் ஆச்சரியமடைந்தனர். மயோடிசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா, அதற்கான சிகிச்சையை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை முன்னேற்றம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அவர் நடிப்பில், சாகுந்தலம் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. சாகுந்தலம் படத்தின் வெளியீடை அடுத்து, காஷ்மீரில் முழுமையாக படபிடிப்பு நடந்துவரும் 'குஷி' என்கிற படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்து இருக்கிறார். இப்படமும் விரைவில் வெளியாக உள்ளது.  சாகுந்தலம் எதிர்பார்த்த அளவு வசூலை குவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையொட்டி அவருக்கும், சாகுந்தலம் படத்தின் தயாரிப்பாளர் சிட்டிபாபுவுக்கும் காரசாரமான விவாதம் எழுந்தது.

இருப்பினும், சமந்தாவுக்கான ரசிகர் பட்டாளம் குறையவே இல்லை எனலாம். ஆந்திராவின் குண்டூர் அருகே பாட்பலா மாவட்டம் அலைபாடு கிராமத்தை சேர்ந்த சந்தீப் எனும் தீவிர ரசிகர் சமந்தாவுக்காக கோவில் கட்டி வருகிறார். இந்த கோவிலின் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | தன்னை விமர்சித்த தயாரிப்பாளருக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகை சமந்தா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News