கோப்ரா படத்தை வெளியிட தடை - உயர் நீதிமன்றம் தீர்ப்பு

நடிகர் விக்ரமின் நடிப்பில் வெளியாக உள்ள கோப்ரா திரைப்படத்தை  சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 29, 2022, 01:01 PM IST
  • கோப்ரா படம் நாளை மறுநாள் ரிலீஸ்
  • மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் ரசிகர்கள்
  • படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது
கோப்ரா படத்தை வெளியிட தடை - உயர் நீதிமன்றம் தீர்ப்பு title=

செவன் ஸ்கீர்ன் ஸ்டுடியோவின் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் விநாயகர் சதுர்த்தியான ஆகஸ்ட் 31ஆம் தேதி உலகெங்கிலும் திரைக்கு வரவுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர்  இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள கோப்ரா படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே டிமாண்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இதற்கிடையே, கோப்ரா படத்தை அரசு மற்றும் தனியாரின் 29 இணையதள  சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக 1788 இணையதளங்களில்  வெளியிட தடை விதிக்க வேண்டுமென பட தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, பல மாதங்கள் உழைப்பில், மிகுந்த பொருட் செலவில், பல போராட்டங்களுக்கு பிறகு படத்தை வெளியிட உள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும். திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் வாதிட்டார்.

மேலும் படிக்க | லைஃப் என்றால் ரோலர் கோஸ்டர் போல - மீனா வெளியிட்ட வீடியோ வைரல்

இதையடுத்து, நடிகர் விக்ரமின் கோப்ரா திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்தும், அவ்வாறு வெளியிடுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

முன்னதாக, கோப்ரா படத்துக்கு முதலில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் அப்படத்துக்கு தற்போது யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கோப்ரா - கடைசி நேரத்தில் கிடைத்த சர்ட்டிஃபிக்கேட்... படக்குழு நிம்மதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News