சென்னை: நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு சென்னை மண்டலத்தில் அதிக அளவில் பரவி வருவதால், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவை மீண்டும் தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகளை அதிமுக அரசு (AIADMK Govt) அறிவித்துள்ளது. இந்தநிலையில், சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென் இந்தியா நடிகர் சங்கம் வரும் ஜூன் 30 செயல்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 1 ஆம் தேதி முதல் கொரோனா தொற்று நோயால் (Coronavirus Death) அதிக எண்ணிக்கையிலான இறப்புகளை நாடு சந்தித்து வருகிறது. அதேபோல தமிழகத்திலும் பாதிப்பு மற்றும் இறப்பு அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது.
இந்த செய்தியும் படிக்கவும் | சென்னை பூட்டுதல் விதிமுறையில் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு!
தமிழ் நாட்டை பொறுத்த வரை சென்னை (Chennai) மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வட்டங்களில் மாநிலத்தில் கொரோனா வைரஸ் நாவலின் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு ஜூன் 19 முதல் 30 வரை சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் முழுமையான ஊரடங்கை தமிழக அரசு நேற்று (திங்கள்கிழமை) அறிவித்துள்ளது.
அதாவது தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பேட்டை மாவட்டங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 4 மாவட்டங்களிலும் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு (Lockdown) அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 மற்றும் 28ம் ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 20ம் தேதி நள்ளிரவு முதல் 22ம் அதி காலை வரை எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
நாளை முதல் சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு நடைமுறைக்கு வரும்பட்சத்தில் விதிமுறைகளில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தநிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் (Nadigarsangam) சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், சென்னை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் விதமாக 12 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் நாளை முதல் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை சங்க அலுவலகம் செயல்படாது என அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
#nadigarsangam #siaa notice : lockdown holidays 19.6.2020 to 30.6.2020 pic.twitter.com/gMXuUTxYOO
— NadigarSangam PrNews (@NadigarsangamP) June 18, 2020