Cobra: மாஸ் லுக்குடன் ரசிகர்களுக்கு ஒரு கிறிஸ்துமஸ் விருந்து அளிக்கும் சியான் விக்ரம்

கோலிவுட்டின் பிரபலம், அதிரடி மற்றும் அடக்கி வாசிக்கும் நடிப்புக்கு பெயர் போன சியான் விக்ரம் தனது ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு சிறப்பு கிறிஸ்துமஸ் விருந்தளித்துள்ளார்.  

Written by - ZEE Bureau | Last Updated : Dec 25, 2020, 09:45 PM IST
  • விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படத்தின் போஸ்டர் கிறிஸ்துமஸ் அன்று வெளியிடப்பட்டது
  • முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் விக்ரமுடன் போட்டி போடும் படம் கோப்ரா
  • இமைக்கா நொடிகள் புகழ் அஜய் ஞான முத்து கோப்ராவை இயக்குகிறார்
Cobra: மாஸ் லுக்குடன் ரசிகர்களுக்கு ஒரு கிறிஸ்துமஸ் விருந்து அளிக்கும் சியான் விக்ரம்

கோலிவுட்டின் பிரபலம், அதிரடி மற்றும் அடக்கி வாசிக்கும் நடிப்புக்கு பெயர் போன சியான் விக்ரம் தனது ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு சிறப்பு கிறிஸ்துமஸ் விருந்தளித்துள்ளார். கோப்ரா திரைப்படத் தயாரிப்பாளர்கள் படத்தின் இரண்டாவது போஸ்டரை (second look poster) வெளியிட்டனர். அந்த போஸ்டரில் சியானின் வித்தியாசமான அவதாரம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. 

இந்த போஸ்டரை பகிர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர்கள், "ஒவ்வொரு பிரச்சினைக்கும் கணித தீர்வு உள்ளது" இந்த திரைப் படத்தில், விக்ரம் (Vikram) பல வேடங்களில் நடிக்கிறார். முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்தத் திரைப்படத்தில் (Film) நடிக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாலினி, கனிகா, பத்மபிரியா, பாபு ஆண்டனி என பலரும் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர்.  

“இந்த படம் தமிழ், இந்தி (Hindi) மற்றும் தெலுங்கு ரசிகர்களையும் ஈர்க்கும் ஒரு பான்-இந்திய படமாக இருக்கும். Viacom 18 Motion Pictures நிறுவனத்துடன் இணைந்து மிகப்பெரிய அளவில் தயாரிக்கப்படும் கோப்ரா (Cobra) திரைப்படம் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் அதிகரித்துள்ளது.   

இந்தப் படத்தில் நடிக்கும் போது, சியான் விக்ரம் (Vikram) தனது உயிரை மூன்று முறை பணயம் வைத்திருக்கிறார். கை, கால்கள் மற்றும் வாயைக் கட்டிக்கொண்டு தலைகீழாக மூழ்க வேண்டும். ஸ்டண்ட்மேன்களால் கூட அதை செய்ய முடியாததால் அந்தக் காட்சியை மாற்ற முடிவு செய்தார்கள்.

ஆனால், சமரசம் செய்ய வேண்டாம் என்று கூறிய விக்ரம், அவரே ஸ்டண்டை செய்தார். அதுமட்டுமல்ல, பல டேக்குகள் எடுத்து அந்த காட்சியை முடித்துக் கொடுத்திருக்கிறார். அடுத்த நாள், விக்ரமின் கண்கள் மற்றும் காதுகளின் நரம்புகள் இறுகிப் போய்விட்டது. சிகிச்சை பெற வேண்டியிருந்தாலும் அவர் பிற காட்சிகளில் நடித்தார்.  

Also Read | நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதானுக்கு (Irfan-Pathan) நேற்று 36வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. 2003ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்காக பந்து வீசி பந்து வீச்சாளராக அறிமுகமானார் இர்பான் பதான். பவுலிங்கில் ஆல் ரவுண்டர் ஆன இவர், தற்போது சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.

இர்பான் பதானுக்கு பிறந்தநாள் பரிசு
இர்பான் கானின் பிறந்தநாளை முன்னிட்டு கோப்ரா படக்குழு அட்டகாசமான அவரது கேரக்டர் லுக் போஸ்டரை வெளியிட்டு அசத்தியது. சியான் விக்ரம், ஸ்ரீனிதி ஷெட்டி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கோப்ரா படத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். இறுதி கட்ட படப்பிடிப்புகள் மட்டுமே எஞ்சியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா?... லீக்கான புகைப்படம்!

கிறிஸ்துமஸ் (Christmas) பண்டிகையை முன்னிட்டு, 'கோப்ரா' படத்தின் புதிய போஸ்டர் வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது கொல்கத்தாவில் 'கோப்ரா' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.  

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

More Stories

Trending News