பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா?... லீக்கான புகைப்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்று வரும் பிக்பாஸின் கம்பீர குரலுக்கு சொந்தக்காரர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது..!

Written by - ZEE Bureau | Last Updated : Dec 25, 2020, 12:30 PM IST
பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா?... லீக்கான புகைப்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்று வரும் பிக்பாஸின் கம்பீர குரலுக்கு சொந்தக்காரர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது..!

இந்தியாவில் பிக்பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சி 2006 ஆம் ஆண்டு முதல் இந்தி மொழியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை இந்தியில் 13 சீசன்கள் நிறைவடைந்து 14-வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்தியில் இந்நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து கன்னடா மற்றும் பெங்காலி மொழியில் 2013 ஆம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இதை தொடர்ந்து தமிழில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கபட்டது. இதுவரை 3 சீசன் முடைவடைந்துள்ள நிலையில், நான்காவது சீசன் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்று வரும் பிக்பாஸின் (Bigg Boss Tamil) கம்பீர குரலுக்கு சொந்தக்காரர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சீசன்களில் சாண்டியை சிஷ்யா என்றும், முகினை முகின் ஐய்யா என்றழைத்தது, நிகழ்ச்சியின் இறுதி நாளில் முகினிடம் அன்பு என்றும் அநாதை இல்லை என்று கூறியது போன்ற எல்லாமே ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இந்த சீசனில் கேப்பிரியல்லாவை கேபி என்று செல்லமாக அழைத்தும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார் பிக்பாஸ்.

ALSO READ | வெட்ட வெளியில் மியா கலிஃபா செய்த அறுவறுப்பான செயல்... தீயாய் பரவும் வீடியோ!

தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ்களை அவ்வப்போது கலாய்ப்பது, பாராட்டுவது என ரசிகர்களை கவர்ந்து வருகிறது பிக்பாஸின் குரல். குரலை மட்டுமே ரசிகர்கள் கேட்டு வரும் நிலையில் அந்த குரலுக்கான முகம் இதுவரை வெளிப்படவில்லை. கடந்த சீசனில் (Bigg Boss 3) பிக்பாஸ் குரலின் சொந்தக்காரரை காண விரும்பிய சாண்டி முகேன் உள்ளிட்ட சிலர் அவரின் போட்டோவை கேட்டனர். அப்போது வெறும் நிழலாக தெரியும் போட்டோவை அனுப்பி வைத்தார். அதனை பார்த்த ஹவுஸ்மேட்ஸ் இதற்கு நீங்கள் போட்டோவை அனுப்பாமலே இருந்திருக்கலாம் என்றனர். இருந்த போதும் பிக்பாஸின் அந்த காந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் என்பதை காண ரசிகர்கள் பெரும் ஆர்வமாக உள்ளனர்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by sasho (@sashospace)

சாஷோ என அழைக்கப்படும் சச்சிதானந்தம் (Satiiysh Saarathy Sasho) என்பவரின் குரல்தான் பிக்பாஸின் குரல். ''பிக்பாஸ் வாய்ஸ் கொடுத்து வரும் சாஷோ வெறும் வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் மட்டுமல்ல, பாலிவுட் நடிகர்'' என அதிரவைத்தார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளிலும் அசத்துவாராம். பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் அத்தனை நாட்களும் பிக்பாஸ் வீட்டின் செட்டில்தான் இருப்பாராம் சாஷோ. தனது கம்பீர குரலால் ஹவுஸ்மேட்ஸ்களை மிரட்டும் இந்த சாஷோ எனும் சச்சிதானந்தத்தை கமல் உட்பட செட்டில் உள்ள அனைவருமே பிக்பாஸ் என்று தான் அழைப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News