சீரியல் ப்ரோமோவால் ஏற்பட்ட சர்ச்சை; வருண்குமார் ஐ.பி.எஸ் தக்க பதிலடி

தனியார் தொலைக்காட்சியில் வெளியான பிற்போக்கான சீரியல் ப்ரமோவிற்கு, தக்க பதிலடி கொடுக்கும் வகையில் வருண்குமார் ஐ.பி.எஸ் விளக்கமளித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 27, 2021, 12:31 PM IST
சீரியல் ப்ரோமோவால் ஏற்பட்ட சர்ச்சை; வருண்குமார் ஐ.பி.எஸ் தக்க பதிலடி title=

சமீபத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் புதிய சீரியலின் ப்ரோமோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் தங்களது TRP மதிப்பீடு உயர்த்த வித்யாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. ஒரு சில தொலைக்காட்சியில் வரும் ஒரு சில நிகழ்ச்சிகள், டிவியின் TRP அளவை எகிற வைக்கிறது.

அந்தவகையில் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் "தென்றல் வந்து என்னை தொடும்" என்ற சீரியலின் ப்ரோமோ அண்மையில் வெளியானது. அந்த சீரியலில் வினோத்பாபு கதாநாயகனாகவும், பவித்ரா ஜனனி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ பெரும் அளவில் கவனத்தை ஈர்த்தது. அதன்படி பலரும் இந்த ப்ரோமோவிற்க்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.

ALSO READ | புதுச்சேரியை தொடர்ந்து தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கப்படுமா.. அரசு கூறுவது என்ன

ப்ரோமோவின் விரிவாக்கம்
அந்த ப்ரோமோவில் "வெளிநாட்டில் இருந்து படித்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பும் பவித்ரா, பாரம்பரியத்தை மறக்காமல் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு காதல் கல்யாணம் செய்யும், இரு காதலர்களை மிரட்டி பெண் கழுத்தில் இருக்கும் தாலியை கழட்ட சொல்கிறார் வினோத் பாபு. அங்கு என்ட்ரீ தந்த பவித்தரா அவனை கண்டித்துள்ளார். உடனே சீரியலின் ஹீரோ தாலியை கட்டி, குங்குமம் வைத்து விட்டு, இப்படி செய்தா நம்ம 2 பேருக்கும் கல்யாணம் ஆயுடுச்சுனு அர்த்தமா என கூறி விட்டு செல்கிறார். தற்போது இந்த ப்ரோமோவிற்கு பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஐ.பி.எஸ், இதுகுறித்து தக்க விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதன்படி., "பிரிவு 4-ன் படி கல்வி நிலையங்கள், கோயில் மற்றும் இதர வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையம், சாலை, ரயில்வே நிலையம், சினிமா தியேட்டர், பார்க், பீச், திருவிழா நடக்கும் இடங்கள், பொதுப் போக்குவரத்து வாகனங்கள் போன்ற இடங்களில், பெண்களை துன்புறுத்தினால், அவர்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். இழப்பீடாக குறைந்தது 10,000 ரூபாய் வசூல் செய்யப்படும்" என்று பதிவிட்டுள்ளார். இவரின் பதிவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

ALSO READ | தமிழக பள்ளிக் கல்வித்துறை 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News