விருமன் படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கும் படம் இதுதான்!

'விருமன்' படத்தை தொடர்ந்து முத்தையா ஆர்யாவை வைத்து புதிய படமொன்றை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jul 1, 2022, 04:47 PM IST
  • கார்த்தி தற்போது முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்துள்ளார்.
  • அடுத்த மாதம் இப்படம் வெளிவர உள்ளது.
  • அடுத்ததாக ஆர்யாவை வைத்து இயக்க உள்ளார்.
விருமன் படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கும் படம் இதுதான்! title=

இயக்குனர் முத்தையா தற்போது கார்த்தியை வைத்து இரண்டாவது முறை 'விருமன்' என்கிற படத்தை இயக்கியுள்ளார்.  இந்த படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக நடித்திருக்கிறார், மேலும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூர்யா மற்றும் கருணாஸ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, இந்த படம் ஆகஸ்ட் 31ம் தேதி  வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மாதவன் அனுப்பிய புகைப்படத்தால் கடுப்பான அவரது மச்சான்

muthiaah

இந்நிலையில் விருமன் படத்திற்கு பின்னர் இயக்குனர் முத்தையா புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார், அந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  தற்போது இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், இந்த படத்தை ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவலும், படத்தில் நடிக்கப்போகும் மற்ற நட்சத்திரங்கள் குறித்த தகவலும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக முத்தையா இயக்கும் படங்களில் மண்வாசனை மிடுதியாக இருக்கும், இதுவரை இவர் இயக்கத்தில் வெளியான 'குட்டிப்புலி', 'கொம்பன்', 'மருது', 'கொடிவீரன்', 'தேவராட்டம்', 'புலிக்குத்தி பாண்டி' போன்ற அனைத்து படங்களும் கிராம பின்னணியில் வெளியானது, தற்போது வெளிவரவுள்ள 'விருமன்' படமும் அப்படிதான் உருவாகி இருக்கிறது.  அந்தவகையில் தற்போது ஆர்யா நடிக்கப்போவதாக கூறப்படும் படம் மதுரை பின்னணியில் அமைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | கார் விபத்தில் சிக்கிக்கொண்ட கேஜிஎஃப் நடிகர்..ரசிகர்கள் அதிர்ச்சி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News