விஜய்யை வைத்து ஏற்கனவே ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர், லோகேஷ் கனகராஜ். இரண்டாவது முறையாக விஜய்யுடன் அவர் கைக்கோர்த்திருக்கும் படம், லியோ. இப்படத்தில் பான் இந்தியா நடிகர்கள் முதல், முக்கிய தென்னிந்திய நட்சத்திரங்கள் வரை பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். படம், வரும் 19ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. ரசிகர்கள் இப்படத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ள நிலையில், அனைத்து படங்களிலும் இருக்கும் 6 முக்கிய அம்சங்கள் இப்படத்தில் இருக்காது என கூறப்படுகிறது. அவை என்னென்ன தெரியுமா?
1.காமெடியே இல்லை:
தமிழ் சினிமாவில் வெளிவரும் படங்களில் கண்டிப்பாக இருக்கும் அம்சங்களுள் ஒன்று, காமெடி. ஆரம்பத்தில் காமெடிக்காக படத்தில் சில நடிகர்களை வைத்திருந்தனர். ஆனால், தற்போது வெளிவரும் படங்களில் ஹீரோக்களே காமெடி செய்து விடுகின்றனர். லோகேஷ் கனகராஜ் படங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் வில்லன்களை வைத்தும் ஹீரோவை வைத்தும் ஒரு சில இடங்களில் காமெடி டைலாக்குகளை தூவினார். இது வர்க்-அவுட் ஆக, அதையே லியோ படத்திலும் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அனைத்து படங்களிலும் இருக்கும் வழக்கமான காமெடியை விட, இவர் படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் அல்லது சீரியஸ் தருணங்களில் காமெடி இருக்கும் என கூறப்படுகிறது.
2.ஹீரோ அறிமுக பாடல்:
கோலிவுட்டில், மாஸ் ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் மட்டுமன்றி சிறிய பட்ஜெட் ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் வரை அனைத்து ஹீரோக்களுக்கும் கண்டிப்பாக ஹீரோ அறிமுக பாடல் இருக்கும். இது எழுதப்படாத வழக்கமாகி விட்டது. இதற்கு முன்னர் வெளியான லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ மற்றும் ‘விக்ரம்’ படத்தில் ஹீரோக்களுக்கான பாடல்கள் இருந்தன. ஆனால், லியோ படத்தில் அப்படி ஒரு பாடல் இல்லை என்று கூறப்படுகிறது. ‘நான் ரெடி’ பாடல், விஜய்யின் ஃப்ளேஷ் பேக் கதையில் இடம் பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே இருக்கிறது என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | LEO Movie: 24 வயது பெண்ணிற்கு அப்பாவாக நடிக்கும் விஜய்?
3.சண்டை காட்சிகளில் டூப் கிடையாது:
ஹாலிவுட்டில் இருந்து கோலிவுட் வரை பயங்கரமான சண்டை காட்சிகளில் ஹீரோக்களுக்கு பதில் ஸ்டண்ட் கலைஞர்களை நடிக்க வைப்பது வழக்கம். விஜய் படங்களிலும் இது போன்ற நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், லியோ படத்தில் நெருப்பில் இறங்கி சண்டை போடும் காட்சியில் கூட நடிகர் விஜய்யே களத்தில் இறங்கி நடித்துள்ளாராம். சாதாரண படங்களிலேயே மூன்றுக்கும் அதிகமான சண்டை காட்சிகள் இடம் பெற்றிருக்கும். லியோ ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படம், அப்போது இதில் எத்தனை சண்டை காட்சிகள் இருக்கும்? இந்த அத்தனை சண்டை காட்சிகளிலும் தானே நடிக்கிறேன் என ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டாராம் விஜய். இதனால், படத்தில் ஸ்டண்ட் கலைஞர்கள் யாரும் இல்லாமல் காட்சிகல் படமாக்கப்பட்டுள்ளன.
4.ப்ரமோஷன் நிகழ்ச்சிகள்:
எந்த படம் வெளியாவதற்கு முன்பும் அப்படத்திற்கு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி அல்லது இசை வெளியீட்டு விழா உள்ளிட்டவை நடப்பது வழக்கம். ஆனால், லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த முடியாமல் போனது. லோகேஷ் கனகராஜ் மட்டும் படம் குறித்து சில நேர்காணல்களில் கலந்து கொண்டார். லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் முன்பிருந்தே இப்படம் குறித்து பல பேட்டிகளில் பேசி வருகிறார். இது தவிர, படத்திற்கென்று தனியாக எந்த ப்ரமோஷன் வேலைகளும் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் இப்படத்திற்கான ஹைப் மட்டும் குறைந்ததாக தெரியவில்லை.
5.பஞ்ச் டைலாக்குகள்:
தமிழ் திரையுலகின் மாஸ் ஹீரோக்களான ரஜினி, கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோரின் படங்களில் கண்டிப்பாக பஞ்ச் வசனங்கள் இடம் பெற்றிருக்கும். ஆனால், இந்த பஞ்ச் டைலாக் நடைமுறைகள் தற்போது மாறி வருகிறது. மக்கள் இதை பெரிதும் விரும்பாததால், ஹீரோக்கள் தங்களது படங்களில் மாஸ் டைலாக்குகளை தவிர்த்து வருகின்றனர். லியோ படத்தில் முன்னர் இருந்த விஜய் படங்கள் போல, பெரிதாக பஞ்ச் வசனங்கள் இருக்காது என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | ‘லியோ’ படத்தில் நடிக்க விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு? முழு விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ