லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு...! லியோ சூட்டிங் ஸ்பாட்டில் கெடுபிடி

லியோ சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து விஜய் தொடர்பான காட்சிகள் லீக்கானதையடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 15, 2023, 07:10 PM IST
லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு...! லியோ சூட்டிங் ஸ்பாட்டில் கெடுபிடி title=

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் படம் லியோ. ‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு விஜய் - லோகேஷ் கனகராஜ் இந்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். இதில் த்ரிஷா, அர்ஜுன், யோகிபாபு, சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது. இதற்காகத் தனி விமானம் மூலம் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் உட்பட படக்குழுவினர் காஷ்மீர் சென்றனர். படத்தைத் தயாரிக்கும் செவன் ஸ்கிரீன் நிறுவனம் இந்த வீடியோவை அண்மையில் வெளியிட்டிருந்தது.

மேலும் படிக்க | மெகா ஹிட் கொடுத்த தமிழ் இயக்குனர் படத்தில் நடிக்கும் KGF யாஷ்?

அங்கு சென்றபிறகு விஜய்யுடன் குளிர்காயும் புகைப்படத்தையும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் படத்தின் சூட்டிங் ஸ்பாட் காட்சிகள் லீக்கானது. அந்த வீடியோவில் விஜய் நடிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு, படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட விடியோவை, சமூக வலைதளத்தில் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது. மேலும், பகிரப்படும் வீடியோ முன்னறிவிப்பின்றி அவை நீக்கப்படும் என்றும் தயாரிப்பு தரப்பு எச்சரித்தது. 

டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பகிரப்பட்ட லியோ காட்சிகளும் நீக்கப்பட்டன. இந்நிலையில், லியோ படக்குழு அதிரடியான முடிவை எடுத்துள்ளது. சூட்டிங் ஸ்பாட்டில் யாருக்கும் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லையாம். சூட்டிங் முடிந்தபிறகே செல்போன் பயன்படுத்த அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இதனைக் கண்காணிக்க தனிக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே விக்ரம் படத்தின் சூட்டிங்கின்போது சூர்யாவின் காட்சி இணையத்தில் லீக்கானது. இப்போது லியோ படத்தின் காட்சி லீக்காகியிருக்கிறது. இது தனிப்பட்ட முறையில் லோகேஷ் கனகராஜூக்கு பெரும் அப்செட்டை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

மேலும் படிக்க | லெஸ்பியனாக நடிக்கும் பிக்பாஸ் சுருதி! வெளியானது பர்ஸ்ட் லுக்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News