தர்பார் திரைப்பட போஸ்டர் தயாரிக்கும் பணியினை ரசிகர்களிடம் விட்டுள்ளனர் படக்குழுவினர்!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் தர்பார். இத்திரைப்படதிதல் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். ரஜினி நீண்ட இடைவெளிக்குப் பின் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஒருசில வீடியோக்கள், புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் லீக் ஆகி வைரலாகி வருகின்றன.
Here you go guys, get creative and rock it. Follow the link to download the HD file https://t.co/iOyGXEpw3V @rajinikanth @LycaProductions @santoshsivan @anirudhofficial pic.twitter.com/EDz5QlA373
— A.R.Murugadoss (@ARMurugadoss) July 25, 2019
இந்நிலையில் இன்று படக்குழுவினர், தாமாகவே முன்வந்து படத்தின் புகைப்படங்களையும், டைட்டில் கார்டினையும் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
மேலும் இந்த புகைப்படம் மற்றும் டைட்டில் கார்டினை கொண்டு அற்புதமான போஸ்டரினை ரசிகர்கள் தயாரிக்க வேண்டும் எனவும் படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதில் தேர்ந்தெடுக்கப்படும் பர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.