இந்த வாரம் OTT-யில் வெளியாகும் 10 படங்களின் பட்டியல் இதோ!

தியேட்டர்களில் வெளியிடப்படும் திரைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை போலவே, OTT-யில் வெளியிடப்படும் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.     

Written by - ZEE Bureau | Last Updated : Nov 25, 2021, 04:37 PM IST
இந்த வாரம் OTT-யில் வெளியாகும் 10 படங்களின் பட்டியல் இதோ!

தியேட்டர்களில் வெளியிடப்படும் திரைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை போலவே, OTT-யில் வெளியிடப்படும் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.   அந்த வகையில் இந்த வாரம் OTT-யில் ரிலீசாகும் படங்களின் பட்டியல்.

ALSO READ அரசியில் கட்சி தலைவர்களை சீண்டியதா மாநாடு திரைப்படம்?

1) திருஷ்யம்-2 (Drushyam2) :

ஜீது ஜோசப் இயக்கத்தில் மலையாள மொழியில் உருவான த்ரில்லர் படம் தான் "திருஷ்யம்-2".   இது 2013-ல் வெளிவந்த 'திரிஷ்யம்' திரைப்படத்தின் தொடர்ச்சியாகும்.  இந்த திரைப்படத்தில் மோகன்லால், மீனா, அன்சிபா அசன் மற்றும் எஸ்தர் அனில் ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு அனில் ஜான்சன்  இசையமைத்துள்ளார்.  இப்படத்தின் முதல் பாகம் நல்ல விமர்சனங்களை பெற்றதை தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவானது.  தமிழில் வெளியான பாபநாசம் படம் இந்த படத்தின் தழுவல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த படம் 'பிரைம்' வீடியோ இயங்குதளத்தில் இந்த வாரம் ரிலீசாகிறது.

drishyam2

2) ப்ரோ (Bro) :

நிக் பாரடா இயக்கத்தில் ஆங்கில மொழியில் உருவான ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படம் தான் 'ப்ரோ  (Bro)'.  கல்லூரி மாணவன் மோட்டார்சைக்கிள் ரேஸ் மீது ஆசைப்பட்டு அந்த உலகில் வாழ்வதே இப்படத்தின் கதை.  இந்த திரைப்படம் 'சோனி லிவ்' இயங்குதளத்தில் இந்த வாரம் ரிலீசாகிறது.

3) ரொமான்டிக் (Romantic) :

அணில் படுரி இயக்கத்தில் தெலுங்கு மொழியில் உருவான ரொமான்ஸ் மற்றும் ஆக்ஷன் நிறைந்த படம் தான்  'ரொமான்டிக் (Romantic)'.  இப்படத்தில் ஆகாஷ் பூரி, கெட்டிகா ஷர்மா, ரம்யா கிருஷ்ணன், மந்திரா பேடி, மஹரந்த் தேஷ்பாண்டே, திவ்யதர்ஷினி போன்ற பலர் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு சுனில் காஷ்யப் இசையமைத்துள்ளார்.  இந்த படம் 'ஆஹா' இயங்குதளத்தில் இந்த வாரம் ரிலீசாகிறது.

4) கோடிகோப்பா -3 (Kotigobba-3) :

சிவகார்திக் இயக்கத்தில் உருவான நகைச்சுவை படம் தான் கோடிகோப்பா -3 (Kotigobba-3).  இது கன்னட மொழி திரைப்படமாகும்.  இப்படத்தில் சுதீப், மடோனா செபாஸ்டியன், சாரதா தாஸ், அபிதாப் ஷிவதாசன், ரவிசங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.  இது 2016-ம் ஆண்டு வெளியான கோடிகோப்பா-2 படத்தின் தொடர்ச்சி ஆகும்.  இந்த படம்  'அமேசான் பிரைம் வீடியோ' இயங்குதளத்தில் இந்த வாரம் ரிலீசாகிறது.

5) சோரி (Chhorii) :

விஷால் புரியா இயக்கத்தில் ஹிந்தி மொழியில் உருவான திகில் படம் சோரி (Chhorii).  இது ஒரு மராத்திய மொழி ரீமேக் படமாகும்.  நுஷ்ரத் பாருச்சா, மிதா வசிஷ்ட், பல்லவி அஜய், யாநீ பரத்வாஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த படம் 'அமேசான் பிரைம் வீடியோ' இயங்குதளத்தில் இந்த வாரம் ரிலீசாகிறது.

chhorii

6) ரிபப்ளிக் (Republic) :

தேவகட்டா இயக்கத்தில் தெலுங்கு மொழியில் உருவான தேசபக்தி படம் தான் 'ரிபப்ளிக் (Republic)'.  இந்த படத்தில் சாய் தரம் தேஜா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜெகபதி பாபு, ரம்யா கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார்.  இந்த படம் அதிகளவில் நேர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது.  இந்த படம் 'zee5' இயங்குதளத்தில் இந்த வாரம் ரிலீசாகிறது.

7) ஹான்சலராக்ஹ் (HonslaRakh) :

அமர்ஜித் சிங்க் சரோன் இயக்கத்தில் பஞ்சாபி மொழியில் உருவான காதல் கலந்த நகைச்சுவை படம் தான் 'ஹான்சலராக்ஹ் (HonslaRakh)'.  இதில் தில்ஜித் தோஸஞ், சோனம் பஜிவா, ஷெஹனாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.  அதிக வசூல் செய்த பஞ்சாபி படங்களில் இதுவும் ஒன்றாகும்.  இந்த படம்  'அமேசான் பிரைம் வீடியோ' இயங்குதளத்தில் இந்த வாரம் ரிலீசாகிறது.

8) எ கொயட் பிளேஸ்-2 (A Quiet Place 2) :

ஜான் க்ராஸின்ஸ்கி இயக்கத்தில் உருவான அமெரிக்க திகில் படம் தான் 'எ கொயட் பிளேஸ்-2 (A Quiet Place 2)'.  2018-ம் ஆண்டு வெளியான எ கொயட் பிளேஸ் படத்தின் தொடர்ச்சியாகும்.  இப்படத்தில் எமிலி ப்ளண்ட், சிலியன் மர்பி, மில்லிசென்ட் சிம்மன்ட்ஸ், நோவா ஜோப் ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு மார்கோ பெல்டராமி இசையமைத்துள்ளார்.  இப்படம் BMS Stream இயங்குதளத்தில் இந்த வாரம் ரிலீசாகிறது.

AQuietPlace2

9) பாசி (Baazi) :

அன்சூமன் பிரத்யுஷ இயக்கத்தில் பெங்காலி மொழியில் தயாரிக்கப்பட்ட ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படம் தான் பாசி (Baazi).  இப்படத்தில் ஜீத், மீமி சக்கரவர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.  2016-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான நன்னகு பிரேமதாவின் ரீமேக்காகும்.  இந்த படம்  Zee5 இயங்குதளத்தில் இந்த வாரம் ரிலீசாகிறது.
 
10)  சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் (Sivaranjaniyum Innum Sila Pengallum) :

வசந்த் இயக்கத்தில் தமிழில் உருவான ஆந்தாலஜி படம் தான்  'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்'.  மூன்று பெண்களை மையமாக வைத்து இப்படம் நகருகிறது.  இப்படத்தில் பார்வதி, காளீஸ்வரி, லட்சுமி பிரியா, சந்திரமௌலி ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.  இந்த படம் சோனி லிவ் இயங்குதளத்தில் இந்த வாரம் ரிலீசாகுகிறது.

ALSO READ வந்தான் ஜெய்சான் ரிப்பீட்டு! Exclusive மாநாடு விமர்சனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News