வந்தான் ஜெய்சான் ரிப்பீட்டு! Exclusive மாநாடு விமர்சனம்!

சிம்பு நடிப்பில் உருவான மாநாடு திரைப்படம் பல போராட்டங்களுக்கு பிறகு இன்று வெளியானது!

Written by - Rajadurai Kannan | Edited by - Shiva Murugesan | Last Updated : Nov 25, 2021, 03:46 PM IST
வந்தான் ஜெய்சான் ரிப்பீட்டு! Exclusive மாநாடு விமர்சனம்!

சிம்பு வெங்கட் பிரபு கூட்டணியில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான "மாநாடு" திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது. பல வித போராட்டங்களுக்கு பிறகு ஒரு வழியாக சிம்புவின் மாநாடு வெளியாகி உள்ளது. இன்று படம் வெளியாகும் என்று போன வாரத்தில் இருந்து புரொமோஷன்கள் நடைபெற்ற நிலையில் கடைசி நேரத்தில் நேற்று மாலை படம் வெளிவராது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்தார். இது சிம்பு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  அதன்பிறகு இரவு பெறும் போராட்டங்களுக்கு பிறகு படம் இன்று வெளியானது. ஆனாலும் காலை 5 மணி காட்சிகள் நடைபெறவில்லை. கொட்டும் மழையிலும் திரையரங்கு வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதன் பிறகு தமிழகம் முழுவதும் 8 மணி காட்சிகள் ஒளிபரப்பு ஆனது.

maanad

ஒரு நாளில் நடக்கும் ஒரு குறிப்பிட்ட சம்பவத்தில் சிம்பு மாட்டி கொள்கிறார். அதிலிருந்து அவர் எப்படி தப்பித்தார் என்பதே படத்தின் ஒன் லைன். Time loop எனப்படும் Concept-ஐ மையமாக வைத்து வெங்கட் பிரபு இப்படத்தை இயக்கி உள்ளார். படத்தின் ஆரம்பத்தில் வர காட்சியே முதல் பாதி முழுவதும் திரும்ப திரும்ப வந்தாலும் அது சலிக்காத வண்ணம் தனக்கே உரிய பாணியில் கலக்கி உள்ளார் வெங்கட் பிரபு. 

சிம்பு கடினமாக நடித்து வாங்கும் கைதட்டல்களை, வில்லன் எஸ் ஜே சூர்யா தனது ரியாக்சன்கள் மூலமே பெற்று விடுகிறார். அந்த கேரக்டரை வேறு எவராலும் செய்ய முடியாத அளவிற்கு கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் எஸ் ஜே சூர்யா. நான் இளையராஜாவின் வாரிசுடா என்று மீண்டும் ஒரு முறை பின்னணி இசையில் கலக்கி உள்ளார் யுவன் சங்கர் ராஜா.

ALSO READ | Maanaadu Movie: விடிய விடிய நடந்து முடிந்த மாநாடு பஞ்சாயத்து

படத்தில் வரும் கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, சந்திரசேகர், Y G மகேந்திரன் என்று அனைவரும் சிறப்பாக நடித்து உள்ளனர்.  குறிப்பாக இரண்டாம் பாதியில் சிம்பு, எஸ் ஜே சூர்யா, Y G மகேந்திரன் மூன்று பேரும் இணைந்து வரும் ஒரு காட்சியில் திரையரங்கமே சிரிப்பலையில் மிதக்கிறது. படம் ஆரம்பம் முதல் முடியும் வரை வந்த காட்சிகளே திரும்ப வந்தாலும் எங்குமே சிறிது கூட சலிப்பு தட்ட வில்லை. 

simbu

எங்க சார் இவளோ நாளா போனிங்க என்று வெங்கட் பிரபுவை கேட்கும் அளவிற்கு சிறப்பான, சிரிப்பான படத்தை நமக்கு அளித்துள்ளார். படத்தில் ஆங்காங்கே நடப்பு அரசியல் நிகழ்வுகள் வசனங்கள் மூலம் வந்தாலும் துண்டாக தெரியாமல் படத்துடன் நகர்ந்து விடுகிறது. இந்தி திணிப்பு எதிர்ப்பு காட்சிகளும் ஆங்காங்கே இடம் பெறுகிறது. மொத்தத்தில் இந்த மாநாடிற்கு கூட்டம் குறைய போவது இல்லை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News