சிவகார்த்திகேயன் குரலில் கலக்கு மிஸ்டர் லோக்கலு! வீடியோ

மிஸ்டர் லோக்கல் படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Updated: Apr 17, 2019, 11:22 AM IST
சிவகார்த்திகேயன் குரலில் கலக்கு மிஸ்டர் லோக்கலு! வீடியோ

மிஸ்டர் லோக்கல் படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் திரைப்படம் ‘Mr. லோக்கல்’. சிவகார்த்திகேயன் - நயன்தாரா ஜோடியில் உருவாகிவரும் இத்திரைப்படம், இந்த ஜோடியின் முந்தைய படமான ‘வேலைக்காரன்’ படத்தைப் போல் அபார வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவர்களுடன் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.

ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தைத் தயாரிக்கிறார். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது.   

சென்னையின் பல்வேறு இடங்கள் மற்றும் சில வெளிநாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்றுள்ளது. நயன்தாராவின் போர்ஷன் முடிந்துவிட, சிவகார்த்திகேயன் நடிப்பில் சில காட்சிகள் இன்னும் மீதமுள்ளதாக தகவல்கள் தெரவிக்கின்றன. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் மொத்தப் படப்பிடிப்பும் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படம்  மே 1-ஆம் தேதி படம் திரையை எட்டும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். சமீபத்தில், வெளியிடப்பட்ட டீசர் மற்றும் சிங்கிள் டிராக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது, இந்த படத்தில் இடம்பெறும் ‘கலக்கலு Mr.லோக்கலு’ என்ற பாடலை வெளியிட்டுள்ளனர்.