மிஷ்கினின் ‘சைக்கோ’ டிரைலர் ரிலீஸ் - வீடியோ!

சைக்கோ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Last Updated : Jan 8, 2020, 04:36 PM IST
மிஷ்கினின் ‘சைக்கோ’ டிரைலர் ரிலீஸ் - வீடியோ!

சைக்கோ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மிஷ்கின் தற்போது ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார். அவருடன் இயக்குனர் ராம், நித்யா மேனன், அதிதி ராவ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். 'உன்ன நெனச்சு’, ‘நீங்க முடியுமா’ ஆகிய 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் படத்தின் டிரைலரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.  டிரைலர் முழுக்க பின்னணி இசை மூலம் கதை சொல்லியுள்ளார் இயக்குநர் மிஷ்கின்.

 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது

More Stories

Trending News