தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா மற்றும் இயக்குநர் போயாபாட்டி சீனு கூட்டணியில் அண்மையில் வெளியான ‘அகாண்டா’ திரைப்படம் மிகபெரிய வெற்றியை பெற்றது. ஆந்திரா முழுவதும் திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலும் படம் வசூலை அள்ளியது. அதிரடி ஆக்ஷன்கள் நிரம்பிய படமாக வெளிவந்த அகாண்டாவை தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இந்தப் படத்தில் ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றிய ஸ்டண்ட் சிவா, இப்படத்தில் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
ALSO READ | மின்னல் முரளி திரைப்படத்தின் Making Video இதோ...!
இது குறித்து அவர் பேசும்போது, " அகண்டா திரைப்படம் நடிகர் பாலாகிருஷ்ணாவுடன் எனக்கு 3வது திரைப்படம். அவருடன் ஏற்கனவே லட்சுமி நரசிம்மன் மற்றும் சிம்ஹா ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதும், அதில் இடம்பெற்று சண்டைக் காட்சிகளுக்கு அமோக வரவேற்பு இருந்ததும் எனக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. ஸ்டண்ட் இயக்குநராக முழு சுதந்திரத்துடன் இந்தப் படத்தில் பணியாற்றினேன்.
சுமார் 85 நாட்கள் இப்படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. முழுக்க முழுக்க இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கொடுத்த ஒத்துழைப்பினால் மட்டுமே சாத்தியமானது. தயாரிப்பாளர் செலவைப் பற்றி கவலைப்படவில்லை. அவர் கோடிகளை செலவு செய்து இப்படத்தின் சண்டைக் காட்சிகளை உருவாக்க உறுதுணையாக இருந்தார். அவர் கொடுத்த ஊக்கத்தின் காரணமாக படத்தின் சண்டைக் காட்சிகள் இவ்வளவு பிரம்மாண்டமாக வந்தது. ஒரே ஒரு ஃபைட்டுக்கு மட்டும் சுமார் 150 ஸ்டண்ட் கலைஞர்கள் பயன்படுத்தப்பட்டனர். அகண்டா படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகள் சுமார் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பேசப்படும், பேசப்பட வேண்டும். நடிகர் பாலாகிருஷ்ணாவின் அர்பணிப்புக்காகவே படம் வெற்றியை பெற்றிருக்கிறது" என தெரிவித்தார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR