காலா படத்தை கர்நாடகாவில் வெளியிடாமல் இருப்பதே நல்லது -குமாரசாமி!

காலா திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடாமல் இருப்பதே நல்லது என கர்நாடகா முதமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்! 

Last Updated : Jun 5, 2018, 07:19 PM IST
காலா படத்தை கர்நாடகாவில் வெளியிடாமல் இருப்பதே நல்லது -குமாரசாமி! title=

காலா திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடாமல் இருப்பதே நல்லது என கர்நாடகா முதமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்! 

கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது. வரும் ஜூன் மாதம் 7-ஆம் தேதி உலக முழுவதும் திரைக்கு வர இருக்கும் நிலையில் கர்நாடகாவில் இப்படத்தை திரையிட தடை விதித்தது கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை.

இந்த நிலையில் ‘காலா’ பட தயாரிப்பு நிறுவனம் ‘வொண்டர்பார்‘ கர்நாடக ஐகோர்ட்டில் இதுகுறித்து மனு தாக்கல் செய்தது. அதில் ‘காலா’ படம் வருகிற 7–ந் தேதி கர்நாடகத்தில் வெளியாவதாகவும், அதற்கு இங்குள்ள சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறி இருக்கின்றன. எனவே, காலா படத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க மாநில அரசுக்கு உத்தரவிடுமாறு மனுவில் கோரப்பட்டது. மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, காலா திரைப்படம் வெளியிடப்படும் திரையரங்குகளுக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில் கர்நாடகாவில் காலா திரைப்படத்தை வெளியிடாமல் இருப்பதே நல்லது என அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார். மேலும், நான் ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்த வேண்டும். அது என்னுடைய பொறுப்பு. ஒரு தனிப்பட்ட நபரின் கணிப்பாக இப்படி ஒரு சூழ்நிலையில், தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தர்கள் படத்தை வெளியிடாமல் இருப்பது நல்லது. வெளியிடுவதால் அதன் விளைவுகளை படத்தின் தயாரிப்பாளர் எதிர்க்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

காலா படத்திற்கு பாதுகாப்பு வழங்கக் கோரிய ஐகோர்ட்டு உத்தரவு நகல் வரவில்லை.காலாவுக்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்! 

 

Trending News