நடிகர் விஷாலுக்கு வருமானவரித்துறை சம்மன்!

Updated: Oct 24, 2017, 05:43 PM IST
நடிகர் விஷாலுக்கு வருமானவரித்துறை சம்மன்!

சென்னையில் உள்ள நடிகர் விஷால் தயாரிப்பு அலுவலகத்தில் ஜி.எஸ்.டி. வரித்துறையினர் சோதனை நேற்று நடைபெற்றது.

நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சென்னை வடபழனியில் உள்ளது. மத்திய கலால் துறையின் கீழ் செயல்படும் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். 
சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக சோதனை நடைபெற்றது. விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி முறையாக ஜிஎஸ்டி செலுத்தி உள்ளதா? என்று என்பதை அறியவே சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் கூறியதாக தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, வரும் வெள்ளிக்கிழமை சென்னை வருமானவரித் துறை அலுவலத்தில் ஆஜராக நடிகர் விஷாலுக்கு உத்தரவு விடுத்துள்ளனர். 

வரிப் பிடித்தம் செய்ததில் ரூ.51 லட்சம் வரை அரசுக்கு செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு தயாரிப்பு நிறுவன வங்கி கணக்கு புத்தகத்துடன் ஆஜராக வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.