ஐபிஎல் நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிக் கணக்கை இன்னும் தொடங்கவில்லை. விளையாடிய இரு போட்டிகளிலும் அந்த அணி தோல்வியையே தழுவியுள்ளது. முதல் இரு போட்டிகளிலும் சென்னை அணி தோற்பது ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் முதன்முறை. இதனால் சென்னை அனி ரசிகர்கள் கடும் அப்செட்டில் உள்ளனர். விமர்சனங்களைப் போக்க, அடுத்த போட்டியில் வென்றே ஆகவேண்டும் எனும் கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது.
இந்நிலையில் ரவீந்திர ஜடேஜாவின் கேப்டன்சியில் மகேந்திர சிங் தோனி தலையிடுவதாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா விமர்சித்துள்ளார். இது தொடர்பாகத் தெரிவித்துள்ள அவர், ஐபிஎல் லீக் ஆட்டங்கள் இன்னும் இறுதிக் கட்டத்தை எட்டவில்லை எனவும் வெறும் இரண்டு ஆட்டங்களே நடந்துள்ள நிலையில் தோனி தற்போதே ஜடேஜாவின் கேப்டன்சியில் தலையிடுவதில் தனக்கு உடன்பாடு இல்லை எனத் தெரிவித்துள்ளார். ஒருவேளை முக்கியமான போட்டியென்றால்கூட அதில் தோனி தலையிடுவதில் அர்த்தம் உள்ளது எனக் கூறியுள்ள அவர், தோனியின் ரசிகனான தனக்கே தோனியின் இச்செயல்பாடுகள் பிடிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ‘அந்த’ டீம் இந்த தடவை Play-Offக்கே போகாது!- சாபம் விடுகிறாரா ரெய்னா?
முன்னாள் வீரரான பார்த்திவ் படேலும் இவ்விவகாரத்தில் தோனியை விமர்சித்துள்ளார். புதிய கேப்டனை உருவாக்கவேண்டும் என முடிவெடுத்த பின்னர் அவரிடம் முழுப் பொறுப்பையும் வழங்கி சுதந்திரமாக இயங்கவிடுவதே சரியானது எனத் தெரிவித்துள்ள அவர், தான் செய்யும் தவறுகளிலிருந்துதான் ஒருவர் கற்றுக்கொள்ளமுடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை அணிக்கு கடந்த சீசன் வரை கேப்டனாக இருந்த தோனி, நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக திடீரென கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். இதையடுத்து அவர் வகித்துவந்த பதவி ரவீந்திர ஜடேஜா வசம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க| முதல் போட்டியில் தோற்றால் சென்னை சாம்பியன் ஆகாதா?!- உண்மை என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR