‘அந்த’ டீம் இந்த தடவை Play-Offக்கே போகாது!- சாபம் விடுகிறாரா ரெய்னா?

நடப்பு ஐபிஎல் தொடர் பிளே ஆஃப் சுற்று குறித்து சுரேஷ் ரெய்னா கணிப்பு

Last Updated : Mar 31, 2022, 10:36 AM IST
  • சுரேஷ் ரெய்னா இம்முறை ஐபிஎல் விளையாடவில்லை
  • வர்ணனையாளராக செயல்பட்டுவருகிறார் ரெய்னா
  • நடப்பு ஐபிஎல் தொடர் பிளே ஆஃப் குறித்து ரெய்னா கணிப்பு
‘அந்த’ டீம் இந்த தடவை Play-Offக்கே போகாது!- சாபம் விடுகிறாரா ரெய்னா? title=

‘மிஸ்டர் ஐபிஎல்’ எனும் பட்டம், ஐ.பி.எல்லில் 5 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர், ஐபிஎல்லில் அதிக கேட்சுகள் (107) பிடித்த ஃபீல்டர் என பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரரான ரெய்னா இம்முறை ஐபிஎல்லில் விளையாடவில்லை. காரணம்- அவரை எந்த அணியும் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கவில்லை. அத்தனை ஆண்டுகளாக அவர் இருந்துவந்த சென்னை அணியும்கூட ரெய்னாவுக்குக் கைவிரித்தது. விளைவு- தற்போது வர்ணனையாளராக மாறியுள்ளார் ரெய்னா.

ரெய்னா புறக்கணிக்கப்பட்டது அவரது ரசிகர்களிடையே புகைச்சலை ஏற்படுத்தியிருந்தாலும் கண்டிப்பாக அவர் அடுத்தடுத்த ஆண்டுகளில் மீண்டும் ஐபிஎல்லுக்குத் திரும்புவார் எனும் நம்பிக்கையுடனேயே உள்ளனர். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஃபார்முக்குத் திரும்பும் பட்சத்தில் ரெய்னாவை விலைக்கு வாங்க அணிகள் போட்டி போடும் என அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

மேலும் படிக்க | ரெய்னாவுக்குத் திடீர் விருது: ஏன் தெரியுமா?!

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் குறித்த ரெய்னாவின் கருத்துக் கணிப்பு ஒன்று தற்போது பேசுபொருளாகியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் எந்த அணிகளுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என அண்மையில் ரெய்னா கணித்திருந்தார். அதில், எல்லா அணிகளும் ஒவ்வொரு வகையில் சிறப்பான அணிதான் எனத் தெரிவித்த அவர், அதேநேரம், இம்முறை பெங்களூர், சென்னை, லக்னோ மற்றும் டெல்லி ஆகிய அணிகள்தான் ப்ளே ஆப் சுற்றுக்குச் செல்ல வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

                                                          MI Twitter

ஐபிஎல்லில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணியும் ஐபிஎல்லில் மிகவும் வலுவான அணியாக கருதப்படுவதுமான மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட மற்ற 6 அணிகளுள் எதுவும் இம்முறை ப்ளே ஆப் செல்லாது எனவும் அவர் கணித்துள்ளார். அனுபவ வீரரான ரெய்னாவின் இக்கருத்து சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுவருகிறது.

மேலும் படிக்க | ஐ.பி.எல்லுக்கு வரும் புது விதி: வரமா, சாபமா?!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News