ஜல்லிக்கட்டு சர்ச்சை: திரிஷாவுக்கு ஆதரவாக கமல்

நடிகை திரிஷா பீட்டாவின் விளம்பர தூதராக உள்ளார். ஜல்லிக்கட்டு தடைக்கு பீட்டா தான் காரணம் என்பதால் நடிகை திரிஷாவை சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

Last Updated : Jan 15, 2017, 01:32 PM IST
ஜல்லிக்கட்டு சர்ச்சை: திரிஷாவுக்கு ஆதரவாக கமல் title=

சென்னை: நடிகை திரிஷா பீட்டாவின் விளம்பர தூதராக உள்ளார். ஜல்லிக்கட்டு தடைக்கு பீட்டா தான் காரணம் என்பதால் நடிகை திரிஷாவை சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

இப்படி தரக்குறைவாக பேசுபவர்கள் தமிழர்கள் என்று சொல்ல வெட்கப்பட வேண்டும் என்று திரிஷா பதில் அளித்திருந்தார். 

திரிஷாவுக்கு ஆதரவாக கமல் ஹாசன் கருத்து கூறி வருகினார்.  

ஜல்லிக்கட்டுக்கு தடை என்றால் பிரியாணியையும் தடை செய்ய வேண்டும் என்று காளைகள் கொல்லப்படுவது பற்றி கருத்து சொன்ன கமலஹாசன், பாவம் அறியாத பெண் தெரியாமல் செய்து விட்டார். அவர் அளவுக்கு நீங்கள் இறங்க வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார். வாழ வழி செய்வோம் கன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம் என்று தெரிவித்துள்ளார். எனது ஆதரவு எப்போதும் நாகரீகமாக உள்ளவர்களுக்கு மட்டுமே என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார். 

 

 

Trending News