விபத்தில் சிக்கிய ‘ஜவான்’ நாயகன்..! மூக்கிலிருந்து வழிந்த ரத்தம்..தற்போது நிலை என்ன..?

Shah Rukh Khan Accident: பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு, வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Jul 4, 2023, 02:02 PM IST
  • ஜவான் பட நாயகன் ஷாருக்கான்.
  • வெளிநாட்டில் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார்.
  • திடீரென விபத்தில் நேர்ந்துள்ளது.
விபத்தில் சிக்கிய ‘ஜவான்’ நாயகன்..! மூக்கிலிருந்து வழிந்த ரத்தம்..தற்போது நிலை என்ன..? title=

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என புகழப்படும் ஷாருக்கான், படப்பிடிப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வெளிநாட்டிற்கு சென்ற ஷாருக்கான்:

சமீபத்தில் ‘பதான்’ படத்தில் நடித்து 1000கோடி பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷனுக்கு சொந்தமான நாயகனாக இருந்தார், ஷாருக்கான். இவர், அட்லீ இயக்கியுள்ள ஜவான் படத்திலும் நடித்துள்ளார். தற்போது ஒரு படத்தில் நடித்து வரும் ஷாருக்கான், அதற்காக லாஸ் ஏஞ்சலீஸ் நகருக்கு சென்றுள்ளார். படப்பிடிப்பு மும்முரமாக நடைப்பெற்று வந்த இந்த சமயத்தில் யாரும் எதிர்பாராத விதமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 

மேலும் படிக்க | ரஜினி டூ தனுஷ்..படத்திற்காக ‘மொட்டைதலை' லுக்கிற்கு மாறிய நடிகர்கள்..!

விபத்து:

படப்பிடிப்பின் போது நடிகர் ஷாருக்கான் ஒரு சீனில் ஆக்‌ஷன் காட்சியில் நடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இவர் நடிக்க வேண்டிய காட்சிகள் உடனே நிறுத்தப்பட்டுள்ளன. இந்த விபத்தில், அவருக்கு மூக்கில் அடிப்பட்டி ரத்தம் வழிய தொடங்கியுள்ளது. 

மருத்துவமனையில் அனுமதி:

விபத்து நிகழ்ந்தவுடன் ஷாருக்கான் உடனே இந்தியாவிற்கு திரும்பியுள்ளார். இவரை பரிசோதித்த மருத்துவர்கள், பெரிய ஆபத்து எதுவும் இல்லை எனவும் ஆனால் சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதையடுத்து, அவருக்கு அடிப்பட்ட மூக்கு பகுதியில் சிறிய அறுவை சிகிச்சை மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. 

‘ஜவான்’ நாயகன்:

ஷாருக்கான், அட்லீ இயக்கியுள்ள ஜவான் படத்தில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் தொடர்ந்த இப்படத்தின் வேலைகள், விரைவில் முடிவிற்கு வரவுள்ளன. இதில், ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா, விஜய் சேதுபதி போன்ற பலர் நடித்துள்ளனர். இதில், பிரியாமணி ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜவான் படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை ஆனந்தப்படுத்தியது. 

ஹாலிவுட் படத்துடன் ட்ரைலர் ரிலீஸ்..

ஹாலிவுட் நாயகன் டாம் க்ரூஸ் நடித்துள்ள மிஷன் இம்பாசிபிள் 7 திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் ரிலீஸின் போது, ஜவான் பட ட்ரைலர் வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஜவான் படம், வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது. 

மேலும் படிக்க | விஜய்யை போல திடீரென்று இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கிய தென்னிந்திய பிரபலம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News