தக் லைஃப் படத்துல ஜெயம் ரவி கேமியோ ரோல்.. அவரே சொன்ன தகவல்

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த ஜெயம் ரவி தற்போது தக் லைஃப் படத்தில் கெமியோ ரோலில் மட்டுமே நடிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 28, 2024, 04:30 PM IST
  • கமல்ஹாசன் ரங்கராய சக்திவேல் நாயக்கன் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
  • கமல்ஹாசன் -ஜெயம் ரவி காம்பினேஷன் காட்சிகள்.
  • தக் லைஃப் படத்தில் கெமியோ ரோலில் ஜெயம் ரவி.
தக் லைஃப் படத்துல ஜெயம் ரவி கேமியோ ரோல்.. அவரே சொன்ன தகவல் title=

Jayam Ravi Cameo Role in Thug Life : பொன்னியின் செல்வன் படத்தில் பொன்னியின் செல்வனாக நடித்த ஜெயம் ரவி தற்போது தக் லைஃப் பதிரைப்டத்தில் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பான முழு விவரத்தை இந்த பதிவில் காண்போம்.

தக் லைஃப் திரைப்படம் :
இயக்குனர் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான நாயகன் படம் மெகா ஹிட் அடித்தது. இதையடுத்து, தற்போது 36 வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கைக்கோர்த்துள்ள படம் தக் லைஃப் (Thug Life). இது நடிகர் கமல்ஹாசனின் 234வது திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் ரங்கராய சக்திவேல் நாயக்கன் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

தக் லைஃப் படக்குழு விவரம் :
தக் லைஃப் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் சேர்ந்து தமிழ் திரையுலகின் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அதன்படி இதில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடித்து வருகின்றனர். இதில், த்ரிஷா ஏற்கனவே கமலுடன் சில படங்களில் இணைந்து அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தற்போது, 3வது முறையாக தக் லைஃப் படத்தில் அவருடன் கைக்காேர்த்திருக்கிறார். இது மட்டுமன்றி, மனிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ஆயுத எழுத்து, பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்களிலும் இவர் ஏற்கனவே பணியாற்றியுள்ளார். அதேபோல் மணி ரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவியும், ஓகே கண்மணி படத்தில் துல்கர் சல்மானும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | படையப்பா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க இருந்தவர்-அட இந்த நாயகியா?

செர்பியாவில் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு :
நட்சத்திர பட்டாளங்கள் நிறைந்திருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு செர்பியாவில் மூன்று வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. அதன்படி தக் லைஃப் படத்தின் சூட்டிங்கில் மார்ச் மாதத்தில் ஜெயம் ரவி இணையவுள்ளார். கமல்ஹாசன் -ஜெயம் ரவி காம்பினேஷன் காட்சிகள் சென்னையில் நடக்கவுள்ள இந்த ஷெட்யூலில் எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கெமியோ ரோலில் நடிகர் ஜெயம் ரவி :
இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த ஜெயம் ரவி தற்போது தக் லைஃப் படத்தில் கெமியோ ரோலில் மட்டுமே நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பேட்டியில் ஒன்றில் பேசிய ஜெயம் ரவியிடம் தக் லைஃப் திரைப்படத்தில் என்னை நடிக்க மணி சார் கேட்டபோது என்னால் நோ சொல்ல முடியவில்லை. அப்படத்தில் நான் கேமராலில் மட்டுமே நடிக்கிறேன். என்னுடைய காட்சிகள் மார்ச் மாதத்தில் இருந்து சூட் செய்யப்பட இருக்கிறது எனவும் குறிப்பிட்டு இருந்தார். 

 

மேலும் படிக்க | கார் விபத்தில் சிக்கிய ‘எதிர்நீச்சல்’ தொடர் நடிகை! ஆண் நண்பருடன் கைதா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News