அரசியலுக்காக காலா படம் எடுக்கவில்லை! பா.ரஞ்சித்

ரஜினிகாந்த் அரசியலுக்காக காலா படம் எடுக்கவில்லை. முழுக்க முழுக்க மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்காக இந்த படன் எடுக்கப்பட்டுள்ளது.

Last Updated : Jun 7, 2018, 02:46 PM IST
அரசியலுக்காக காலா படம் எடுக்கவில்லை! பா.ரஞ்சித்

கபாலி படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘காலா’. தனுஷ் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் ஹியூமா குரேஷி, ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி உள்ள இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட  திரையரங்குகளில் வெளியானது. மேலும் காலா திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள திரையங்குகளில் இன்று அதிகாலை  வெளியானது. உலகம்  முழுவதிலும் காலை 7 மணிக்கு முதல் காட்சி வெளியானது. காலா திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் தமிழகம்,  மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட இடங்களில் வெளியானது. 

இந்நிலையில் சென்னை சத்தியம் திரையரங்கில் காலா பட இயக்குனர் பா.ரஞ்சித், பேட்டி அளித்தார். அப்போது,

காலா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ரஜினிகாந்த் அரசியலுக்காக காலா படம் எடுக்கவில்லை. முழுக்க முழுக்க மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்காக இந்த படன் எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், நீங்கள் இயக்குனரா ? அரசியல்வாதியா ? என்ற கேள்விக்கு, நான் அரசியல்வாதி தான்.

’காலா’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணமில்லை என்று தெரிவித்த ரஞ்சித், ’காலா’ படத்தை ஃபேஸ்புக்கில் லைவ் செய்த நபருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக நகைப்புடன் கூறினார். 

More Stories

Trending News