'கடுகு' விநியோக உரிமையை கைப்பற்றிய சூர்யா

Last Updated : Feb 13, 2017, 04:52 PM IST
'கடுகு' விநியோக உரிமையை கைப்பற்றிய சூர்யா title=

விஜய் மில்டனின் 'கடுகு' படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றியுள்ளார் சூர்யா.

விஜய் மில்டன் தயாரித்து இயக்கியள்ள படம் தான் 'கடுகு'. இதில் ராஜகுமாரன், பரத், சுபிக்‌ஷா மற்றும் இன்னும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி வந்தது.

இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை கொடுப்பதற்காக பல்வேறு முன்னணி தயாரிப்பாளர்களுக்கு படத்தை திரையிட்டு காட்டி வந்தார் இயக்குநர் விஜய் மில்டன். இறுதியாக சூர்யாவின் '2டி' தயாரிப்பு நிறுவனம் இப்படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது. அடுத்த மாதம் படத்தை வெளியிடு படக்குழு முயற்சித்து வருகிறது.

 

 

Trending News