சம்பளத்தை உயர்த்திய சிம்பு! அடுத்தடுத்து 2 படங்கள் வெற்றியால் திடீர் முடிவு

சம்பளத்தை சிம்பு உயர்த்தியதால், அவரை வைத்து படம் இயக்க நினைத்த இயக்குநர்கள் பின்வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 26, 2022, 04:43 PM IST
  • திடீரென சம்பளத்தை உயர்த்திய சிம்பு
  • அதிர்ந்துபோன கோலிவுட் இயக்குநர்கள்
  • படம் இயக்கும் திட்டத்தை கைவிட்டதாக தகவல்
சம்பளத்தை உயர்த்திய சிம்பு! அடுத்தடுத்து 2 படங்கள் வெற்றியால் திடீர் முடிவு title=

நடிகர் சிம்புவின் மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் மெகா ஹிட் அடித்தன. வசூலில் ராஜபாட்டை நடத்திய இரு படங்களும், தோல்விகளாலும், விமர்சனங்களாலும் துவண்டு கிடந்த சிம்புவுக்கு புது தெம்பை கொடுத்திருகின்றன. இதனால் புது உற்சாகத்தில் இருக்கும் சிம்பு, அடுத்தடுத்து பல படங்கள் கமிட்டாக தொடங்கினார். இயக்குநர்கள் பலர் அவர் வீட்டுக்கு படையெடுக்க தொடங்கினர். சுதா கொங்கரா உள்ளிட்ட முன்னணி இயக்குநர்கள் கூட சிம்புவை வைத்து படம் இயக்க கதை தயார் செய்ததாக கூறப்படுகிறது. 

ஆனால், சிம்பு 2 படங்களில் கிடைத்த வெற்றியால் தன்னுடைய சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தியுள்ளாராம். அவருக்கு பல ஆண்டுகளுக்கு பின்னால் வந்த ஜூனியர் நடிகர்கள் எல்லாம் 25 சி சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பதால், தன்னுடைய சம்பளத்தை ஒரே அடியாக 30 சி-க்கு நெருக்கிவிட்டாராம். இதனால் ஆடிப்போன கோலிவுட் இயக்குநர்கள், அவரை வைத்து படம் இயக்க இருந்த ஆசையை தூக்கி தூர வைத்துவிட்டார்களாம். அவருடைய சம்பளமும், படத்திற்கான பட்ஜெட்டும் செட் ஆகாது என்பதால், வேறு நடிகரை பார்த்துக் கொள்ளலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்களாம்.

மேலும் படிக்க | வாரிசுக்காக வரிந்து கட்டிக்கொண்டு இறங்கிய சிம்பு! தெறி அப்டேட்

இப்போதைக்கு சிம்பு பத்து தல படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக, விண்ணைத் தாண்டி வருவாயா 2 உள்ளிட்ட படங்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக கோலிவுட்டில் காணாமல் போயிருந்த சிம்பு, இப்போது தான் கம்பேக் கொடுத்திருக்கிறார். இன்னும் 2 படங்கள் வரை காத்திருந்தால் என்ன? அதற்குள் சம்பளத்தை ஏற்றிவிட்டாரே என சிலர் கிசுகிசுக்கிறார்களாம்.

ஆனால் சிம்புவோ, இனிமேல் எனக்கான இடத்தை விடப்போவதில்லை என்பதை கறாராக இருக்கும் அவர், இருக்கும் படங்கள் எல்லாவற்றுக்கும் தரமான உழைப்பை தர தயாராக இருக்கிறேன், ஆனால், சம்பளத்தில் கை வைக்கக்கூடாது என்று விடாப்பிடியாக கூறிவிட்டாராம். இந்த தகவலைக் கேட்ட ரசிகர்கள், அடுத்தடுத்து சிம்புவின் படங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே நிஜம் என்று கூறிக் கொள்கிறார்களாம். 

மேலும் படிக்க | பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News