நடிகர் கமல் ஹாசன் அரசியல் பிரவேசத்தை பற்றிய முக்கிய அறிவிப்பை நவம்பர் 7 தேதி அறிவிக்கவுள்ளதாக வார இதழ் ஒன்றிற்கு வார இதழ் பேட்டியளித்துள்ளார்
நடிகர் கமலஹாசனின் அரசியல் பிரவேசம் எப்போது என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வரும் நிலையில், தற்போது இதுகுறித்து விளக்கம் நடிகர் கமல் ஹாசன் கொடுத்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக தொடர்ந்து சமூகப் பிரச்சனைகளைப் பற்றி தனது ட்விட்டரில் பக்கத்தில் கருத்துத் தெரிவித்து வருகின்றார். மேலும் தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
தனது அரசியல் பார்வைக் குறித்து அரசியல் விமர்சகர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருடனும் ஆலோசித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து கமலிடமிருந்து அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் இருக்கலாம் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை குறித்து ஒரு வார இதழ் பேட்டியளித்துள்ளார். அதில், செயலில் ஈடுபடுவார்கள் என்று பொருத்தது போதும், நம்மால் முடியும். நவம்பர் 7 ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியிடஉள்ளேன். நம் இயக்கத்தார் என்னுடனும், மக்களுடனும் தொடர்பு கொள்ள வசதியாக ஏற்பாடுகள் நடக்கின்றன. தமிழகத்திற்கு கடமையாற்ற நினைப்பவர்களைஇருகரம் கூப்பி வரவேற்கிறேன். தியாகமாக நினைத்து முன்வருபவர்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள். அவர்கள் என்னை கடன்பட செய்வார்கள்.
இளைஞர்களை ஒருங்கிணைக்க வேண்டிய கடமையும் தேவையும் எனக்கு வந்து விட்டது. நமது இயக்கத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோருடன்சேர்ந்து தமிழகத்துக்கு பலம் சேர்ப்போம்.
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.