“தற்கொலை குறித்து நானும் யோசித்து இருக்கிறேன்..” கமல்ஹாசன் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

Kamal Haasan About Suicide:நடிகர் கமல்ஹாசன் கல்லூரியில் நடைப்பெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது தனக்கு இருந்த தற்கொலை எண்ணம் குறித்து பேசியிருக்கிறார்.  

Written by - Yuvashree | Last Updated : Sep 24, 2023, 01:17 PM IST
  • நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டார்.
  • தனக்கும் இளமை காலத்தில் தற்கொலை குறித்த எண்ணம் எழுந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
  • மரணத்தை நாமாக தேடி போகக்கூடாது என் கமல் மாணவர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.
“தற்கொலை குறித்து நானும் யோசித்து இருக்கிறேன்..” கமல்ஹாசன் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி..!  title=

ரசிகர்களால் ‘உலக நாயகன்’ என்று அழைக்கப்படுபவர் கமல்ஹாசன். இவர், சமீபத்தில் ஒரு தனியார் கல்லூரியில் நடைப்பெற்ற விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர், தனக்கு இருந்த தற்கொலை எண்ணம் குறித்து பேசியிருக்கிறார். 

விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை…

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா சில நாட்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளியில் படிக்கும் 16 வயதாகும் இந்த சிறுமியின் மரணம் திரையுலகினர் மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. திரையுலகினர் பலரும் விஜய் ஆண்டனியின் குடும்பத்தினருக்கு சமூக வலைதள பக்கங்கள் மூலமாகவும் நேரிலும் இரங்கல் தெரிவித்திருந்தனர். நடிகர் கமல்ஹாசனும் இரங்கல் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அவர் ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொண்டு தனக்கு ஏற்பட்ட தற்கொலை எண்ணம் குறித்து பேசியிருக்கிறார். 

“நானும் தற்கொலை குறித்து யோசித்து இருக்கிறேன்..” 

சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் கல்லூரியில் சமீபத்தில் ஆண்டு விழா நடைப்பெற்றது. இதில், நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதில், தற்கொலை குறித்து பேசியிருக்கும் அவர், தனக்கு 20, 21 வயது இருக்கும் போது தானும் தற்கொலை குறித்து யோசித்து இருப்பதாகவும், கலை உலகம் தன்னை கண்டுகொள்ளவில்லையே என்ற ஏக்கத்தில் இவ்வாறி யோசித்ததாகவும் கூறியிருக்கிறார். மேலும், வெற்றி கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும் எனவும் ஒரு போதும் அவசரப்பட்டு விடக்கூடாது எனவும் கமல்ஹாசன் கூறியிருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், வாழ்வின் ஒரு அங்கம்தான் மரணம் என்றும், அது வரும் போது வரட்டும் நீங்கள் தேடாதீர்கள் என்றும் மாணவர்களுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார். 

மேலும் படிக்க | மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் கமல்ஹாசன்?

நேரத்தை கையாள்வது எப்படி? 

விழாவில் நடிகர் கமல்ஹாசனிடம் நேரத்தை எப்படி கையாள்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், தான் நேரத்தை கையாள்வதில்லை எனவும் நேரம்தான் தன்னை கையாள்வதாகவும் கூறியிருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், புகழால் மயங்க கூடாது என்றும் உயிர் வாழ்வதற்கு கொஞ்ச நாள்தான் இருப்பதாகவும் தனக்கு ஒரு குரல் சொல்லிக்கொண்டே இருப்பதாகவும் கூறினார். இந்த குரல் தனக்கு 19 வயதிலேயே கேட்க ஆரம்பித்து விட்டதாகவும் தெரிவித்தார் கமல். 

கமல்ஹாசனின் அடுத்தடுத்த திரைப்படங்கள்..!

கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக விக்ரம் திரைப்படம் வெளியானது. இதையடுத்து அவரது இந்தியன் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. கமல், கல்கி ஏடி 2989 படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இதில் அவருடன் இணைந்து பிற பான் இந்திய நட்சத்திரங்களான பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இது குறித்து அமெரிக்காவில் நடைப்பெற்ற பட நிகழ்ச்சியிலும் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அடுத்து, இயக்குநர் ஹெச்.விநோத்தின் இயக்கும் படத்திலும் கமல்ஹாசன் நடிக்கிறார். 

மேலும் படிக்க | 40 வயதிலும் 20 வயது வாலிபன் தோற்றம்..! சிம்புவின் இளமைக்கான ரகசியம் என்ன..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News