நடிகர் கமல் ஹாசன் அரசியல் பிரவேசத்தை பற்றிய முக்கிய அறிவிப்பை நவம்பர் 7 தேதி அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வந்திருந்த நிலையில் தற்போது அவர் ஒரு புதிய டிவிட் செய்துள்ளார்.அதில்,
ஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது. நவம்பர்.7 இயக்கத்தார் கூடுவது எம் பலவருட வழக்கம்.பொது அறிவுப்புகள் மக்கள் மன்றத்திலேயே நடக்கும்
— Kamal Haasan (@ikamalhaasan) October 26, 2017
இவ்வாறு டிவிட் செய்துள்ளார்.
இந்நிலையில் வரும் நவம்பர் 7-ம் தேதி தனது பிறந்த நாளில் ரசிகர்களைச் சந்தித்து, தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட கமல் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
ஆனால், நவம்பர் 7-ம் தேதி கட்சி அறிவிப்பு இல்லை என்று கமல் தெரிவித்துள்ளார். இது குறித்து கமல் தன் டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.