தளபதி விஜய் படத்தில் கமல்ஹாசன்? வெளியான மாஸ் அப்டேட்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள 'தளபதி 67' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Nov 20, 2022, 09:40 AM IST
  • 'தளபதி 67' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கமல்ஹாசன்.
  • விரைவில் தொடங்கும் தளபதி 67 படப்பிடிப்பு.
  • அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
தளபதி விஜய் படத்தில் கமல்ஹாசன்? வெளியான மாஸ் அப்டேட்!

சமீபத்தில் வெளியான 'விக்ரம்' படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.  'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து இவர் மீண்டும் விஜய்யை வைத்து 'தளபதி 67' படத்தை இயக்கப்போகிறார், இருப்பினும் இப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இதுவரையில் திரையில் காணாத நட்சத்திரங்களை பல்வேறு கதாபாத்திரங்களில் இந்த படத்தில் நடிக்கவைக்க படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது 'தளபதி 67' படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.  இயக்குனர் லோகேஷ் தனது முந்தைய படங்களில் நடித்த நட்சத்திரங்களை அடுத்தடுத்த படங்களில் நடிக்கவைத்து ஒரு சினிமாட்டிக் யூனிவர்சை உருவாக்குபவர் என்பது நன்கு தெரிந்த ஒன்று தான்.

மேலும் படிக்க | வாரிசு படம் வெளியாகவில்லை என்றால் போராட்டம் வெடிக்கும் - பேரரசு

அந்த வகையில் தற்போது இயக்குனர் விஜய்யை வைத்தி இயக்கப்போகும் படத்தில் கமல்ஹாசனை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  'தளபதி 67' படத்தில் விஜய்யோடு இணைந்து கமல்ஹாசன் நடித்தால் இருதரப்பு ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு படம் மிகப்பெரிய வெற்றியை பெறும்.  விரைவில் இந்த படத்தில் விஜய்யோடு, கமல்ஹாசன் இணையப்போகும் அதிகாரபூர்வ தகவல் வெளியாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  'தளபதி 67' ஒரு பயங்கரமான கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக இருக்குமென்றும், நடிகர் விஜய் இதில் ஒரு டான் போல இருப்பார் என்றும், சில பெரிய நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் 'தளபதி 67' படத்தில் நடிக்க நடிகர் சஞ்சய் தத் அதிகாரபூர்வமாக ஒப்பந்தமாகி இருப்பதாகவும், மற்ற நடிகர்களான நிவின் பாலி, விஷால், கெளதம் மேனன் மற்றும் அர்ஜுன் ஷார்ஜா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.  விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் ஷூட்டிங் பணிகள் தாமதம் ஏற்பட்டுள்ளதால் 'தளபதி 67' படத்தின் பணிகளிலும் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது.  

மேலும் படிக்க | படத்துக்கு படம் சிக்கல் - மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார் விஜய்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

More Stories

Trending News