கார்த்திகை தீபம் அப்டேட்: ஐஸ்வர்யாவின் கர்ப்பம்.. டாக்டர் சொன்ன தகவல், கார்த்தியின் அடுத்த அதிரடி

Karthigai Deepam Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம் தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 19, 2024, 04:42 PM IST
  • கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோட்.
  • ரியாவிடம் ஐடியா கேட்கும் ஐஸ்வர்யா.
  • லைனில் நிற்கும் கார்த்தி.
கார்த்திகை தீபம் அப்டேட்: ஐஸ்வர்யாவின் கர்ப்பம்.. டாக்டர் சொன்ன தகவல், கார்த்தியின் அடுத்த அதிரடி title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கார்த்திகை தீபம்’ சீரியல்.

கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.  இது சீரியலில் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா அபிராமி கூட்டிக்கொண்டு ஹாஸ்பிடல் வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

ரியாவிடம் ஐடியா கேட்கும் ஐஸ்வர்யா

அதாவது ஐஸ்வர்யா சைடு கேப்பில் தனியாக வந்து ரியாவுக்கு போன் போட்டு ஏதாவது ஐடியா கேட்க அவளும் ஒரு ஐடியா சொல்ல அது ஃபெயிலியர் ஆகிறது. இதையடுத்து வேறு வழியில்லாமல் ஐஸ்வர்யா அபிராமியுடன் கிளம்பி ஹாஸ்பிடல் வருகிறாள். 

ஹாஸ்பிடலில் டாக்டர் ஐஸ்வர்யாவின் நண்பராக இருக்க ஓர் அளவிற்கு நிம்மதி அடைகிறார். இருந்தாலும் டாக்டர் ஐஸ்வர்யாவை பரிசோதனை செய்ய அவள் கர்ப்பம் இல்லை என தெரிய வர அபிராமி மற்றும் அருணிடம் விஷயத்தில் சொல்ல அதிர்ச்சி அடைந்து ஐஸ்வர்யாவை திட்டி அறைகின்றனர். கடைசியில் இது ஐஸ்வர்யா கண்ட பகல் கனவு என தெரிய வருகிறது. 

இதையடுத்து பரிசோதனை செய்யும் டாக்டரிடம் ஐஸ்வர்யா கெஞ்சி கூத்தாடி உண்மையை மறைக்க ஒப்புக்கொள்ள வைக்கிறாள். பிறகு டாக்டர் ஐஸ்வர்யா கர்ப்பம் தம் குழந்தை நன்றாக இருப்பதாக பொய் சொல்கிறார். 

லைனில் நிற்கும் கார்த்தி

அடுத்ததாக மில்லில் தொழிலாளர்கள் சாப்பாடு வாங்க லைனில் நிற்க கார்த்தியும் அவர்களோடு லைனில் இருக்கிறார். மற்ற தொழிலாளர்கள் நீங்க எதுக்கு நிற்கிறீர்கள் என்று கேட்க நானும் தொழிலாளி தானே லைனில் இருந்து தான் சாப்பாடு வாங்கணும் என்று நின்று சாப்பாடு வாங்கி சாப்பிட சாப்பாடு நன்றாகவே இல்லை என்பது தெரிய வருகிறது. 

மேலும் படிக்க | பூசணிக்காய், பலாப்பழம் ஏன் இருட்டா இருக்கு.. வாக்குச்சாவடியில் மன்சூர் அலிகான் வாக்குவாதம்

எப்போதும் இப்படிதான் சாப்பாடு போடுகிறார்கள் என்று தொழிலாளர்கள் சொல்ல கார்த்திக் மேனேஜரை கூப்பிட்டு வாக்குவாதத்தில் ஈடுபடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

கார்த்திகை தீபம்: சீரியலை எங்கு பார்ப்பது?

கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | TN Lok sabha Election 2024: சினிமா பிரபலங்கள், நட்சத்திர வேட்பாளர்கள் வாக்குப்பதிவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News