நடிகர் பவர் ஸ்டார் சினிவாசன் மருத்துவமனையில் அனுமதி!

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான பவர் ஸ்டார் சீனிவாசன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Written by - ZEE Bureau | Last Updated : Feb 25, 2021, 04:40 PM IST
நடிகர் பவர் ஸ்டார் சினிவாசன் மருத்துவமனையில் அனுமதி!

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான பவர் ஸ்டார் சீனிவாசன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். து தொடர்பாக வெளிவந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பவர் ஸ்டார் (Powerstar) எனும் புனைப்பெயரில் அறியப்படும் சீனிவாசன் தமிழ்த்திரைப்பட நடிகர், தயாரிப்பளர், இயக்குனராவார். 2013 சனவரி 13 இல் நடிகர் சந்தானத்தின் (Santhanam) தயாரிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் முன்னணி வேடத்தில் நடித்தார். இதற்கு முன்னர் லத்திக்கா எனும் தமிழ்த்திரைப்படத்தை தயாரித்து நடித்திருந்தார். தற்போது இவர் ஒரு சில படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்து வந்தார்.

ALSO READ | நடிகர் சந்தானம் பாஜகவில் இணையப்போவதாக வெளியான தகவல்: ரியாக்‌ஷன் என்ன?

இதற்கிடையில் 2012 இல் ஜி. யு. பாலசுப்பிரமணியன் எனும் குரோம்பேட்டையிலுள்ள ஆர்.பி.எசு இன்டர்நேசனலின் உரிமையாளரை ஏமாற்றி மோசடி செய்ததற்காக சீனிவாசன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். ஒரு சில வழக்குகளில் சிக்கி சர்ச்சைக்குள்ளான பவர்ஸ்டார் சீனிவாசன் தற்போதும் ஒருசில படங்களில் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் இன்று சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் அவருக்கு கொரோனா (Coronavirus) பாதிப்பு உள்ளதா என்பது குறித்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு சற்று கவலையான செய்தியாக உள்ளது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News