RJ பாலாஜின் அடுத்த திரைப்படத்தில் நாயகியாக நயன்தாரா?

LKG திரைப்பட நாயகன் RJ பாலாஜியின் அடுத்த திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Last Updated : Nov 8, 2019, 01:36 PM IST
RJ பாலாஜின் அடுத்த திரைப்படத்தில் நாயகியாக நயன்தாரா? title=

LKG திரைப்பட நாயகன் RJ பாலாஜியின் அடுத்த திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற செல்லப்பெயரால் அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. 15 ஆண்டுகாலமாக திரைப்படத் துறையில் கொடிகட்டிப் பறக்கும் அவர், தென்னிந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நாயகர்களுடனும் நடித்துள்ளார். 

சமீபகாலமாக அவர், குறிப்பிட்டு சில நல்ல கதைகளைம், கதாநாயகிக்கு முக்கியத்துவம் நிறைந்த கதைகளையும் தேர்வு செய்து நடித்துவருகிறார். அந்த வகையில் அவருக்கு தென்னிந்திய திரையுலகில் நல்ல பெயர் வாங்கி தந்த திரைப்படம் அறம்.

சமீபத்தில் ‘கோலமாவு கோகிலா' திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருந்த நயன்தாரா, இத்திரைப்படத்தில் மிடில் கிளாஸ் பெண்ணாக, முன்னணி கதாநாயகர்கள் யாருமின்றி, காமெடியில் கலக்கிவரும் யோகி பாபுவுடன் இணைந்து நடித்திருந்தார். அதேபோல், பல படங்களில் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, வளர்ந்துவரும் கதாநாயகர்களுடனும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது தமிழ் திரைப்படங்களில் காமெடி நடிகராக வளம் வந்து இறுதியாக LKG திரைப்படத்தில் நாயகனாக நடித்த RJ பாலாஜி உடன் நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நயன்தாரா விஜயுடன் நடித்து வெளியான ‘பிகில்' வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்நிலையில், தற்போது பாலாஜி கதாநாயகனாக நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இருவரும் முன்னதாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரௌடி தான், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். பல படங்களில் நகைச்சுவை நடிகராக அசத்தி வந்த RJ பாலாஜி, தற்போது இத்திரைப்படத்தில் நாயகனாக மீண்டும் பிரவேசம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான அரசியல் கேளிக்கை படமான LKG, RJ பாலாஜிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் ஆதரவையும் பெற்றுத் தந்தது. இப்படத்தில் அரசியல் பிரமுகர், பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பாலாஜிக்கு அப்பாவாக நடித்திருந்தது குறிப்பிடதக்கது.

கிடைக்கப்பெற்ற தகவல்கள் படி RJ பாலாஜி கதாநாயகனாக நடிக்கவிருக்கும் அடுத்த படம் ‘மூக்குத்தி அம்மன்' என தலைப்பிடப்பட்டுள்ளது. LKG திரைப்படத்தை தயாரித்த வேல்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கிறது. இத்திரைப்படத்திலேயே நயன்தாரா இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் எனக் கூறப்படுகிறது.

Trending News