ஆஹா தியேட்டரில் Fire தான்.. கங்குவா படத்தின் ட்விஸ்ட் அப்டேட்

Kanguva Movie Update: சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா படத்திலிருந்து Fire Song தற்போது வெளியாகியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 23, 2024, 11:25 AM IST
  • இன்று நடிகர் சூர்யாவின் பிறந்தநாள்.
  • கங்குவா படத்தின் முக்கிய அப்டேட் வெளியீடு.
  • அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும்.
ஆஹா தியேட்டரில் Fire தான்.. கங்குவா படத்தின் ட்விஸ்ட் அப்டேட் title=

Kanguva Movie Update: சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா படத்திலிருந்து Fire Song தற்போது வெளியாகியுள்ளது.

கங்குவா திரைப்படம்:

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கங்குவா'. கிட்டத்தட்ட 300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் கங்குவா படம் 10 இந்திய மொழிகளில் 3டியில் வெளியாகிறது. அதுமட்டுமின்றி 'கங்குவா' திரைப்படம் மூன்று வெவ்வேறு காலகட்டங்களுக்கு இடையே நடக்கும் கதை போல் உருவாகி உள்ளது. இந்த படத்தில் சூர்யா மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடித்துள்ளார். மேலும், பாலிவுட் நடிகை திஷா பதானி தமிழில் அறிமுகமாகும் படம் கங்குவா. இயக்குநர் சிவா மற்றும் அணியினர் இந்தப் படத்தை எழுதி இயக்குகின்றனர். இந்தப் படத்திற்கு வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் பாபி தியோல், யோகி பாபு, கோவை சரளா, தீபா வெங்கட், ஜெகபதி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டைட்டில் டீசரை படக்குழுவினர் முன்பே வெளியிட்டனர். அதில் சூர்யா இதுவரை இல்லாத ஒரு புதிய தோற்றத்தில் காணப்பட்டார். மேலும் இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

மேலும் படிக்க | யோகி பாபுவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? யம்மாடியோ

இரண்டு பாகங்களில் வெளியாகவிருக்கும் கங்குவா: 

இதனிடையே கங்குவா திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இரண்டு பாகங்களுக்கான ஷூட்டிங்க்கை சிவா முடித்துவிட்டதாகவும், இதில் முதல் பாகம் கட்டாயம் மெகா ஹிட்டாகும் என்றும் கூறப்படுகிறது. 

முதல் பாடல் வெளியீடு:
இந்நிலையில் இன்று நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு காங்குவா படத்தின் முத்தக் பாடல் ஃபயர் சாங் (Fire Song) தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை மகாலிங்கம், செந்தில் கணேஷ், செண்பகராஜ், தீப்தி சுரேஷ் ஆகியோர் பாடியுள்ளனர். விவேகா பாடல் வரிகளை எழுதி இருக்கிறார்.

கங்குவாவில் தம்பி கார்த்தி: 

இதனிடையே கங்குவா படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ளதாக தகவல் வெளியானது. சில நிமிடங்கள் அவர் வரும் காட்சிகளை ரிலீஸ்வரை வெளியே சொல்லாமல் சர்ப்ரைஸ் கொடுக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 'ரகு தாத்தா' ஹிந்திக்கு எதிரான படமா? கீர்த்தி சுரேஷ் சொன்ன விளக்கம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News