சிவாஜி கணேசன் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய முதல் படம்! எது தெரியுமா?

Sivaji Ganesan 1 Crore Salary Movie : நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இன்று பிறந்தநாள். இதையடுத்து அவர் முதன்முதலாக 1 கோடி சம்பளம் வாங்கிய படம் எது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : Oct 3, 2024, 10:33 AM IST
  • சிவாஜி கணேசன் 1 கோடி வாங்கிய முதல் படம்
  • ரஜினியுடன் நடித்திருக்கிறார்!
  • என்ன படம் தெரியுமா?
சிவாஜி கணேசன் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய முதல் படம்! எது தெரியுமா?  title=

Sivaji Ganesan 1 Crore Salary Movie : நடிகர் திலகம் என்னும் பெயருக்கு சொந்தக்காரர் சிவாஜி கணேசன். இவர் நடித்த அனைத்து படங்களும் மக்களைக் கவர்ந்துள்ளது. இன்றும் மக்கள் மனதில் நினைவிருக்கும்  நடிப்பு நாயகன் சிவாஜி, தனது  நடிப்பில் மக்களை வெகுவாக கவர்ந்து இன்றும்-என்றும் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.

சிவாஜி கணேசன் தனது திரையுலகில் பலவிதமான கதாப்பாத்திரங்களில் நடித்ததும் அவற்றுக்காக தன்னை சித்தரித்துக்கொண்ட விதமும் மக்களை வெகுவாக கவர்ந்த அம்சங்களாகும். இதனால்தான், இவரை மக்கள் நடிகர் திலகம் என்ற பெயர் சொல்லி அழைக்க ஆரம்பித்தனர். தன் நடிப்புத் திறமையை பல்வேறு மொழி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பெரிய அடையாளமாக விளங்கினார். 

பாடல்களிலும் நவரசம் காட்டியவர்..

சிவாஜி நடித்த படங்களில் இடம் பெற்றிருந்த பாடல்களில் மிகவும் பிடித்த பாடல் எது?” என மக்களிடம் கேட்டால் திணறிவிடுவார்கள். அப்படி அனைத்திலும் பாத்திரத்தை உள்வாங்கி நடித்தவர் இவர். ஏன் பிறந்தாய் மகனே, சட்டி சுட்டதடா, ஆறுமனமே ஆறு ஆண்டவன் கட்டளை ஆறு, போனால் போகட்டும் போடா உள்ளிட்ட பாடல்கள் மனதில் நின்றவை. இவற்றிற்கெல்லாம் மகுடமாக திகழ்கிறது,  கர்ணன் படத்தில் இடம் பெற்ற, “ உள்ளத்தில் நல்ல உள்ளம்” பாடல். இதில், நெஞ்சில் அம்பை வாங்கிக்கொண்டு உயிர்ப்போகும் தருவாயில் இருக்கும் கர்ணனாக வாழ்ந்தே இருப்பார். 

படையப்பா படத்தில் ரஜினிக்கு தந்தை:

1999ஆம் ஆண்டு வெளியான மிகப்பெரிய தமிழ் வெற்றிப் படங்களில் ஒன்று படையப்பா. கே.எஸ்.  ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இப்படம், மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. இதில் சிவாஜி கணேசன்,ரஜினிகாந்த், லட்சுமி, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். 

மேலும் படிக்க | குக் வித் கோமாளி மணிமேகலை-பிரியங்கா சம்பள விவரம்! இருவரில் யாருக்கு அதிக சம்பளம்?

Sivaji Ganesan

படையப்பா படத்தில் சிவாஜியின் காதாப்பாத்திரம் மற்றும் கதை:

இப்படத்தில் ரஜினிகாந்த்திற்குத் தந்தையாகச் சிவாஜி கணேசன்  நடித்திருந்தார். கதையில் சிவாஜியின் உறவினர்கள் அனைவரும் சொத்து தகராறில் ஒன்றில், சிவாஜி மற்றும் அவரது குடும்பதாரை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிடுவர். சிவாஜி அந்த ஏக்கத்தில் கடைசியாக தன் வீட்டைப் பார்க்க வேண்டும் என்று தன் மகன்,மனைவியிடம் கேட்டு ஓடிசென்று வீட்டின் வாசலின் தூண்னை கட்டிப்பிடித்து அழுதுகொண்டு தன் உயிரை நீத்துடுவார். இந்த காட்சி பலரது மனதில் தாங்க முடியாத பாரத்தை கொடுத்தது. 

சம்பளம்..

சிவாஜியின் சம்பளத்தை கேட்டு நமக்கு ஷாக் ஆகுமோ-ஆகாதோ தெரியவில்லை. ஆனால் சிவாஜி பெரிதாக ஷாக் ஆகிவிட்டாராம். சிவாஜியின் நடிப்பிற்கான சம்பளத்தைச் அவரது மூத்த மகன் ராம் குமார் பெற்றார். அப்போது அவர் சிவாஜியிடம் “உங்களுக்கு 1 கோடி ரூபாய் காசோலை வந்திருக்கிறது” என்று கூறினாராம். அதற்குச் சிவாஜி சிரித்துக் கொண்டே “ஒழுங்காகப் பார்..அது 1 கோடியாக இருக்காது 10 லட்சமாக இருக்கும்” என்று கூறினாராம்.

அதன் பின் உண்மையில்  என்ன நடந்தது?

சிவாஜி தன் மூத்த மகன் சொன்னது பற்றி ரஜினியிடம் கேட்டறிந்தார். காசோலையில் 10 லட்சத்திற்கு பதில் 1 கோடி எழுதியிருக்கிறது எனக் கேட்டதற்கு ரஜினிகாந்த், “ஆமாம் 1 கோடி ரூபாய் இப்படத்திற்கான உங்களுடைய சம்பளம்” என்று சொன்னதும் சிவாஜிக்கு இன்ப அதிர்ச்சி அளித்திருந்தார். மேலும் இதுதான் சிவாஜி  நடிப்பிற்காக வாங்கிய முதல் அதிகமான சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | விஜய் முதல் சிவகார்த்திகேயன் வரை.. தி கோட் படக்குழுவினர் சம்பளம் எவ்வளவு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News