சந்தானத்துக்கு ஜோடியாகும் விஜய் பட கதாநாயகி! யார் தெரியுமா?

காமெடி நடிகர் சந்தானம் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் விஜய் பட நாயகி ஒருவர் ஹீராேயினாக களமிறங்குகிறார். அவர் யார் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Jun 27, 2024, 08:04 PM IST
  • சந்தானத்துக்கு ஜோடியாகும் விஜய் பட நாயகி
  • டிடி ரிட்டர்ன்ஸ் 2 படத்தில் நடிக்கிறாராம்..
  • அவர் யார் தெரியுமா?
சந்தானத்துக்கு ஜோடியாகும் விஜய் பட கதாநாயகி! யார் தெரியுமா?  title=

தென்னிந்திய திரையுலகிலேயே அதிகம் சம்பாதிக்கும், மக்களை அதிகம் கவர்ந்த காமெடி நடிகராக பார்க்கப்பட்டவர், சந்தானம். திடீரென இனி காமெடியனாக நடிக்கப்போவதில்லை என்று முடிவு செய்த அவர், காமெடி படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 

கலாய்க்கு பெயர் போன சந்தானம்:

நடிகர் சந்தானம், முதன் முதலில் ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியின் மூலமாகத்தான் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இந்த நிகழ்ச்சியில் இவர் டைமிங்கில் அடிக்கும் காமெடிக்கும்-கலாய்க்கு பலர் வயிறு குலுங்க சிரித்தனர். இதையடுத்து, இவருக்கு நடிகர் சிலம்பரசன் மூலம் திரையுலகில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. சீரியஸான இடங்களிலும் இவர் கொடுக்கும் கவுண்டர்கள் ரசிகர்களை பெரிதும் மகிழ்வித்தது. இதையடுத்து தொடர்ந்து அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்த இவர் அடுத்து ரஜினிகாந்துடனும் சேர்ந்து 2 படங்களில் நடித்து விட்டார்.

தொடர்ந்து பேய் படங்கள்..

பலரும் பலரது கனவுகளுடன் திரையுலகிற்குள் நுழைவர். அது போல, நடிகர் சந்தானமும் ஹீரோவாக வேண்டும் என்ற கனவுடன் திரையுலகிற்குள் நுழைந்திடிருப்பார் போலும். 9 வருடங்களுக்கு முன்பு “இனிமே நடிச்சா ஹீரோவா மட்டும்தான்..” என்று சபதம் போட்ட இவர், “இனிமே இப்படித்தான்” படம் மூலம் ஹீராேவாக அறிமுகமானர். இவருக்கும் காமெடி கான்செப்ட் வர்க்-அவுட்டாக..அப்படியே தொடர்ந்து காமெடி கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். படம் பெரிதளவில் பேசப்படுவதில்லை என்றாலும், குடும்ப ரசிகர்கள் மற்றும் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் இருக்கிறது.

முதன்முதலாக, தில்லுக்கு துட்டு பேய் படத்தில் கதாநாயகனாக நடித்த சந்தானத்திற்கு இந்த கான்செப்ட் வர்க்-அவுட்டாக..தொடர்ந்து பேய் படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படவுள்ள படம்தான், டிடி ரிட்டர்ன்ஸ் 2. 

மேலும் படிக்க | 50 செகண்ட் டீசரில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? GOAT படத்தின் அப்டேட்!

டிடி ரிட்டர்ன்ஸ் 2:

டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம், கடந்த ஆண்டு வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்ற படங்களுள் ஒன்றாகும். இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இதில், விஜய் படத்தின் நாயகி ஒருவர் நடிக்க இருக்கிறார். அவர் யார் தெரியுமா? 

விஜய் பட நாயகி..

விஜய் நடித்து வரும் கோட் (GOAT-The Greatest Of All Time) படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர், மீனாட்சி செளத்ரி. இவர், சந்தானத்திற்கு டிடி ரிட்டர்ன்ஸ் 2 படத்தில் ஜோடியாக நடிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Meenakshi Chaudhary

யார் அவர்?

மீனாட்சி சௌத்ரிக்கு தற்போது வயது 27 ஆகிறது. ஹரியானாவில் பிறந்த இவர், மாடலிங் துறையில் இருந்து நடிப்புத்துறைக்கு வந்தார். பல் மருத்துவம் படித்து, மாநில அளவிலான நீச்சல் வீராங்கனையாகவும் பேட்மிட்டன் வீராங்கனையாகவும் இருக்கிறார். இவர் முதலில் நடித்த படம், இந்தியில் வெளியான அப்ஸ்டேர்ஸ் படம்தான். அத பிறகு தெலுங்கில் சில படங்களில் நடித்த இவர், தமிழீல் கொலை படம் மூலம் அறிமுகமானார். சமீபத்தில் வெளியான சிங்கப்பூர் சலூன் படத்திலும் நடித்திருந்தார். இவர் நடிப்பில் வெளியாக கோட் படத்துடன் சேர்த்து 5 படங்கள் வெயிட்டிங்கில் இருக்கின்றன. 

மேலும் படிக்க | OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News