சன்னி லியோனின் ‘கொட்டேஷன் கேங்’ பட டிரெய்லர் வெளியீடு!

Quotation Gang Trailer : சன்னி லியோன், ப்ரியாமணி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘கொட்டேஷன் கேங்’. அடுத்த மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.  

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Yuvashree | Last Updated : Jun 28, 2024, 09:00 PM IST
  • தமிழில் மீண்டும் நடித்த சன்னி லியோன்
  • கொட்டேஷன் கேங் படம்
  • டிரைலர் வெள்யீட்டு விழா..
சன்னி லியோனின் ‘கொட்டேஷன் கேங்’ பட டிரெய்லர் வெளியீடு!  title=

Quotation Gang Trailer : ஃபிலிம்னாட்டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், இயக்குநர் விவேக்குமார் கண்ணன் இயக்கத்தில், நடிகர்கள் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், பிரியாமணி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘கொட்டேஷன் கேங்’. அடுத்த மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். 

நடிகர்கள் பேசியது:

ஸ்டண்ட் மாஸ்டர் ஓம் பிரகாஷ், "காஷ்மீரில் நிறைய ஸ்டண்ட் செய்தோம். சன்னி மேடம், ப்ரியாமணி மேடம் இருவரும் ரிஸ்க்கான ஸ்டண்ட்டை மழையில் ஒரே டேக்கில் டூப் இல்லாமல் ஓகே செய்தார்கள். இதுபோல பல ரிஸ்க்கான காட்சிகள் இருக்கிறது. 'யாத்திசை' படத்துக்குப் பிறகு வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விவேக், தயாரிப்பாளர் காயத்ரிக்கு நன்றி" என்றார். 

நடிகை அக்‌ஷயா, "ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், ப்ரியாமணி என சீனியர் நடிகர்கள் எல்லோருமே எங்களிடம் அவ்வளவு அன்பாக நடந்து கொண்டார்கள். படத்தில் ப்ரியாமணி எனக்கு நடிப்பதற்கான ஸ்பேஸ் கொடுத்தார். அது பெரிய விஷயம்! படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைக் கொடுங்கள்".

பாடலாசிரியர் அருண் பாரதி, "இயக்குநரை இங்கேதான் முதல்முறையாக பார்க்கிறேன். டிரம்ஸ் சிவமணி சார்தான் எனக்கு பாட்டெழுத சொன்னார். படத்தில் நான் எழுதிய அனைத்துப் பாடல்களுமே நன்றாக வந்துள்ளது. இயக்குநருக்கும் பிடித்துள்ளது. படத்தில் பணிபுரிந்தது நல்ல அனுபவம். படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்!".

மேலும் படிக்க | ரஜினியின் ‘வேட்டையன்’ படத்துடன் மோதும் இன்னொரு பெரிய படம்! எது தெரியுமா?

நடிகை ப்ரியாமணி, "இயக்குநர் விவேக்கிற்கு நன்றி. இவர் என்னிடம் சொன்ன முதல் கதை சில காரணங்களால் டேக் ஆஃப் ஆகவில்லை. இரண்டாவது சொன்ன இந்த கதை பிடித்துவிட்டது. என்னுடைய கரியரில் காண்ட்ராக்ட் கில்லர் ரோல் இதுவரை செய்ததில்லை. இயக்குநர் விவேக்கின் சகுந்தலா கதாபாத்திரத்தை நன்றாக நடித்திருக்கிறேன் என நம்புகிறேன். தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் சிறப்பாக பணியாற்றினார்கள். எனக்கும் அக்‌ஷயாவுக்கும்தான் நிறைய காம்பினேஷன் காட்சிகள். அக்‌ஷயா சிறப்பாக செய்திருக்கிறார். சன்னி பற்றி வேறொரு இமேஜ் உங்களுக்கு இருக்கலாம். ஆனால், இந்தப் படத்தில் அவருடைய பத்மா கதாபாத்திரம் உங்கள் எண்ணத்தை மாற்றிவிடும். ஜாக்கி ஷெராப் சாரும் எங்களுக்கு சப்போர்ட்டாக இருந்தார். படம் ஜூலையில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

நடிகை சன்னி லியோன், "இந்தப் படத்தில் எனக்கு நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளது. என்னைப் பற்றிய உங்கள் எண்ணத்தை இந்தப் படம் நிச்சயம் மாற்றும். படம் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்” எனக்கூறினார்.

இயக்குநர் விவேக்குமார் கண்ணன், “முதலில் ப்ரியாமணி மேம் வைத்துதான் படத்தை ஆரம்பித்தோம். அடுத்து ஜாக்கி ஷெராப், சன்னி லியோன் என அடுத்தடுத்து வந்தார்கள். காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்துவது எளிதான விஷயம் கிடையாது. கேமரா மேன், ஸ்டண்ட் மாஸ்டர், மேக்கப் ஆர்டிஸ்ட் என எல்லோருமே சிறப்பாக பணி செய்தார்கள். ப்ரியாமணி, சன்னி லியோன், ஜாக்கி ஷெராப், அக்‌ஷயா என எல்லோருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பேபி சாராவுக்கு சிறப்பான கதாபாத்திரம் படத்தில் இருக்கிறது. தியேட்டரில் உங்களுக்கு அந்த அனுபவம் கிடைக்க வேண்டும் என்றுதான் நிறைய வேலை பார்த்திருக்கிறோம். படம் ஜூலையில் பாருங்கள்” என்றார். 

மேலும் படிக்க | Vadivelu : வெங்கால் ராவிற்கு உதவிய நடிகர் வடிவேலு? என்ன செய்தார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News