ஜெயிலர்
தென்னிந்தியாவின் பெருமை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட, கபாலி, காலா போன்ற அவரது தொடர்ச்சியான வெற்றிகளுக்குப் பிறகு, அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் மூலம் தமன்னா பாட்டியா பல ஆண்டுகளுக்குப் பிறகு கோலிவுட்க்கு மீண்டும் வருவதால், அவரை காண அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஜெய்லர் படத்தின் ட்ரைலர், பாடல்கள் என அனைத்தும் ஹிட் அடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.
ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்
திகில் படங்களுக்கு பெயர் பெற்ற ராகவா லாரன்ஸ் தற்போது அந்த பார்முலாவை மாற்றி உள்ளார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் (ஜிகர்தண்டா 2) - இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரென்ஸ், எஸ் ஜே சூர்யா, நிமிஷா சஜயன் என பலர் நடிக்கும் திரைப்படம். இப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தன் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் இப்படத்தினை தயாரிக்கிறார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் 2023 தீபாவளிக்கு வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகும்.
தங்கலன்
2023 நிச்சயமாக சியான் விக்ரமின் ஆண்டு என்பதில் சந்தேகமே இல்லை. பொன்னியின் செல்வனில் அவரது சிறப்பான பாத்திரத்தின் காரணமாக அவருக்கு ஏற்கனவே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இரட்டிப்பாகியுள்ளது, அவரது மற்றொரு படமான தங்காளன் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. விக்ரம் தென்னிந்தியாவின் ஜானி டெப் என்று அழைக்கப்படுகிறார், ஏனென்றால் ஒவ்வொரு படத்திலும் அவர் வித்தியாசமான நடிப்பை வெளிக்கொண்டு வருகிறார். வரவிருக்கும் இந்த வரலாற்று படத்தில், பிரமிக்க வைக்கும் வகையில் நீண்ட தாடி, மீசையுடன் முற்றிலும் வித்தியாசமாகத் தோன்றுகிறார். இந்தத் திரைப்படம் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது என்பதால் நடப்பில் அசத்த போகிறார் என்பதில் சந்தேகமே இல்லை.
அயலான் - நவம்பர்
மாவீரன் போல், சிவகார்த்திகேயனின் அடுத்த படம் அவரது நடிப்பு வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பமாக இருக்கிறது. முன்னதாக, அவர் ஹீரோ என்ற படத்தில் சூப்பர் ஹீரோவாக நடித்தார், அது ரசிகர்களிடம் சரியாக சென்றடையவில்லை. அதன் பிறகு, குறைந்த ஆக்ஷன் மற்றும் மசாலா கொண்ட படங்களில் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். இருப்பினும், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றொரு VFX நிறைந்த படமான அயலான் மூலம் மீண்டும் களமிறக்க உள்ளார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பதால் படம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.
கேப்டன் மில்லர்
தனுஷ் தனது இயல்பான நடிப்பிற்காக பல தேசிய விருதுகளை பெற்றுள்ளார், அதே காரணத்திற்காக ஹாலிவுட்டிலும் படங்களில் நடித்துள்ளார். அவரது கடைசி திரைப்படம் பெரிய தோல்வியடைந்தாலும், கேப்டன் மில்லர் அவருக்கு ஒரு திருப்புமுனையையும், மற்றொரு பெரிய விருதையும் கொடுக்கப் போகிறார் என்பதில் அவரது தீவிர ரசிகர்கள் உறுதியாக உள்ளனர். இந்தப் படத்தின் இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், தனுஷின் தேசிய விருது பெற்ற பெரும்பாலான படங்களில் பணியாற்றிய இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் காம்போ இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
ஜப்பான்
பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் பெரும் பாராட்டுகளைப் பெற்ற மற்றொரு நடிகர் கார்த்தி. அவரது அடுத்த படமான ஜப்பான் இந்த ஆண்டு வெளியாக உள்ளது. படம் ஒரு தென்னிந்திய திருடனை மையமாகக் கொண்டதாகக் கூறப்படுவதால், சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய படமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. கோலிவுட்டில் உள்ள பாதி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். அக்டோபர் 19ம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது.
மேலும் படிக்க | ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ