வசூலில் பின்னிப் பெடலெடுக்கும் லவ் டுடே..இத்தனை கோடியா!

பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 7, 2022, 09:43 AM IST
  • லவ் டுடே படத்தின் வசூல் நிலவரம்,.
  • பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்து உள்ளார்.
  • ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ளது.
வசூலில் பின்னிப் பெடலெடுக்கும் லவ் டுடே..இத்தனை கோடியா! title=

கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக லவ் டுடே என்ற படத்தை அவரே எழுதி, இயக்கி, நடித்துள்ளார். டி ஆர் ராஜேந்திரன், ஹிப் ஹாப் தமிழா என இவர்களது வரிசையில் இணைந்துள்ளார் பிரதீப். பாடல்கள் முதற்கொண்டு இவரே எழுதியுள்ளார். லவ் டுடே படத்தின் டிரைலர் வெளியானதிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்த்து அதிகமாக இருந்தது. மேலும் புரமோசன்களுகும் சிறப்பாக அமைந்தது இருந்தது. ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

ஹீரோ பிரதீப் மற்றும் ஹீரோயின் இவானா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டதாக நினைத்துக் கொண்டு உள்ளனர். இவர்களின் காதல் இவானவின் அப்பர் சத்யராஜுக்கு தெரிய வருகிறது. அவர் இருவரையும் அழைத்து இந்த காதலுக்கு சம்மதம் தெரிவிப்பதாகவும், ஆனால் ஒரு நாள் மட்டும் இருவரும் தங்களது மொபைல்களை மாற்றிக் கொள்ளுமாறு சொல்கிறார். இதன் பின் என்ன ஆனது என்பதே லவ் டுடே படத்தின் கதையாகும்.

மேலும் படிக்க | நடிப்பது 2 கோடிக்கு வாங்குவது 200 கோடி - சூப்பர் ஸ்டாரை சீண்டிய கங்கனா ரணாவத்

இந்த காலகட்டத்தில் காதல் எப்படி இருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக லவ் டுடே படம் காட்டுகிறது. இந்தப் படம் தற்போது உள்ள இளைய சமுதாயத்திடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இன்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 19.6 முதல் 20.6 கோடி வரையும், உலகம் முழுவதும் 26.5 முதல் 27.5 கோடி வரை வசூல் வேட்டை நடைப்பெற்று வருகிறது. அதேபோல் இரண்டாவது நாள் முடிவில் தமிழ்நாட்டில் மட்டும் 6.6 கோடி வசூல் செய்துள்ளது. அதேபோல் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 9.5 கோடி வசூல் செய்துள்ளது. முடிவில் தமிழ்நாட்டில் மொத்தமாக 10.6 கோடியும் உலகம் முழுவதும் 15.5 கோடியும் வசூல் செய்துள்ளது.

இதற்கிடையில் லவ் டுடே படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு காரணமாக இப்படத்திற்கான காட்சிகளும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் லவ் டுடே படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | இந்தியன் 2வில் களமிறங்கும் யுவராஜ் சிங் தந்தை - புகைப்படம் வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News