உறுதியானது தளபதி 67 இயக்குனர் பெயர்! அதிகாரப்பூர்வ தகவல்!

லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் காம்போவில் வெளியான 'மாஸ்டர்' படத்தின் வெற்றியினை தொடர்ந்து இந்த கூட்டணி 'தளபதி 67' படத்தில் மீண்டும் இணைகிறது.  

Written by - RK Spark | Last Updated : Oct 12, 2022, 08:20 AM IST
  • விஜய் லோகேஷ் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளனர்.
  • ரசிகர்கள் பலரும் இந்த அறிவிப்பிற்காக காத்துக்கொண்டுள்ளனர்.
  • விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உறுதியானது தளபதி 67 இயக்குனர் பெயர்! அதிகாரப்பூர்வ தகவல்! title=

தமிழ் சினிமாவில் தற்போது பல ரசிகர்களாலும் கொண்டாடப்படும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ், அடுக்கடுக்காக தனது படங்களால் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றிருக்கிறார்.  சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான 'விக்ரம்' படம் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்து, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.  இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் தனது அடுத்த படத்துக்கான பணிகளில் பிஸியாகிவிட்டார்.  மீண்டும் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் 'தளபதி 67' படம் உருவகப்போவதாக ஊடகங்களில் தொடர்ந்து தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது.  ஏற்கனவே லோகேஷ்-விஜய் காம்போவில் வெளியான 'மாஸ்டர்' படம் நல்ல வெற்றியினை பெற்றிருந்தது, கொரோனா தொற்று சமயத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருந்தது.

மேலும் படிக்க | அமெரிக்கா பறக்கும் சமந்தா; தோல் பிரச்னையா? என்ன ஆச்சி

'மாஸ்டர்' படத்தின் வெற்றியை வைத்து ரசிகர்கள் லோகேஷ்-விஜய் கூட்டணியில் உருவாகும் 'தளபதி 67' படத்தை பற்றிய அப்டேட்டுகளை அறிய ஆர்வமாக காத்துகொண்டு இருந்தனர்.  'தளபதி 67' படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் தற்போது இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.  நடிகர் கலையரசனும், இயக்குனரும் லோகேஷும் சிறந்த நண்பர்கள், லோகேஷுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ள நடிகர் கலையரசன், நீண்ட நாட்கள் கழித்து நண்பனை சந்தித்துள்ளேன், வழக்கம்போல அவரது #தளபதி 67 படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்று ட்வீட் செய்து இருக்கிறார்.   

 

இதன்மூலம் 'தளபதி-67' படத்தை லோகேஷ் தான் இயக்குகிறார் என்பது தெளிவாக தெரியவந்துள்ளது. லோகேஷ்-விஜய் இணையும் 'தளபதி 67' குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு அக்டோபர்-23ம் தேதியன்று வெளியாகுமென்று என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் நடிகர் விஜய் தனது வாரிசு படத்தின் படப்பிடிப்பை இந்த மாத இறுதியில் முடித்த பிறகு லோகேஷின் 'தளபதி 67' படத்தில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  'தளபதி 67' குறித்த அப்டேட்டை தெரிந்துகொள்ள ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க | தளபதி விஜய் பாடல் மற்றொரு சாதனை - ரசிகர்கள் கொண்டாட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News