பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டி போடும் 2 படங்கள், வசூல் நிலவரம்

இதுவரை 10 நாட்களில் 50 கோடி வசூலை வாரி குவித்திருக்கிறது லவ் டுடே படம், அதே சமயம் யசோதா வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 16, 2022, 10:59 AM IST
  • 50 கோடியை தட்டி தூக்கிய லவ் டுடே.
  • பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டி.
  • 3 நாள் வசூல் நிலவரம் இதோ.
பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டி போடும் 2 படங்கள், வசூல் நிலவரம்

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவர் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள யசோதா படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த நவம்பர் 11 ஆம் தேதி வெளியானது, மேலும் அதிக திரையரங்களுகளில் லவ் டுடே ஓடி கொண்டிருக்கிறது. தற்போது இந்த படங்களின் வசூல் நிலவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

லவ் டுடே படத்தின் விவரம்:
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீசான படம் லவ் டுடே. கோமாளி படத்தின் வெற்றிக்கு பின் அவர் இயக்கிய இரண்டாவது படம் இதுவாகும். இப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ராதிகா, யோகிபாபு, ரவீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். முதல் நாள் முதல் காட்சியில் இருந்தே படத்துக்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்தது. தற்போதைய நிலவரப் படி இந்த படம் சுமார் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. 

மேலும் படிக்க | முதல விஜய் பட டைட்டில்...இப்போ விஜய் கூட; கலக்கும் "லவ் டுடே" பட இயக்குனர்

யசோதா படத்தின் விவரம்:
ஹரி - ஹரிஷ் இயக்கத்தில் ஆக்‌ஷன்-த்ரில்லராக உருவாகியுள்ள படம் யசோதா. இந்தப் படத்தில் சமந்தா வாடகைத்தாய் கான்செப்ட்டை மையமாகக் கொண்டு நடித்திருக்கிறார். இதில் சமந்தா லீட் ரோலில் நடித்திருக்கிறார். இவருடன் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராம் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிகிறது. இதற்கிடையில் இதில் இடம்பெற்ற சமந்தாவின் ஸ்டண்ட் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

லவ் டுடே படத்தின் வசூல் நிலவரம்:
முதல் நாள் முதல் காட்சியில் இருந்தே இந்த படத்துக்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்தது. தற்போதைய நிலவரப் படி இந்த படம் சுமார் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. முதல் நாளில் 3 கோடியாகவும், இரண்டாம் நாள் 5.35 கோடியாகவும், மூன்றாம் நாள் 6.25 கோடியாகவும், ஐந்தாவது நாட்களில் ரூ. 20 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.

யசோதா படத்தின் வசூல் நிலவரம்:
இதற்கிடையில் மூன்றே நாட்களில் யசோதா 20 கோடியை பாக்ஸ் ஆபிஸில் குவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியான யசோதா படத்திற்கு முன்பே வெளியான லவ் டுடே படம் தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் லவ் டுடே படம் வெளியாகி 5 நாட்களில் 20 கோடியை குறித்த நிலையில், யசோதா வெறும் மூன்றே நாட்களில் அந்த சாதனையை முறியடித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இந்தியன் 2வில் களமிறங்கும் யுவராஜ் சிங் தந்தை - புகைப்படம் வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

More Stories

Trending News