மாரியின் பிறப்பு ரகசியத்தை உடைத்த சூர்யா.. கடுப்பான தாரா - மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

பிறகு மாரி உள்ளே வந்ததும் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட மாரி மட்டும் சாப்பிடாமல் இருக்க பார்வதி மாரியை பக்கத்தில் உட்கார வைத்து ஒரு அம்மாவாக சாப்பாடு ஊட்டி விடுகிறாள்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 29, 2023, 03:02 PM IST
  • மாரி சீரியல் இன்றைய அப்டேட்
  • மாரியின் பிறப்பு ரகசியத்தை உடைத்த சூர்யா
  • கடுப்பான தாரா... காணதவறாதீர்கள்
மாரியின் பிறப்பு ரகசியத்தை உடைத்த சூர்யா.. கடுப்பான தாரா - மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்  title=

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மாரிக்கு பாம்பு விஷம் தடவிய புத்தகத்தை கொடுத்த மரியா, தாரா டீம் ஏற்பாடு செய்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது எல்லாரும் மாரியின் பிறந்தநாளை கொண்டாட வீட்டிற்கு வர சூர்யா எல்லா ஏற்பாடுகளையும் செய்திருக்க மாரி இது அத்தனையும் ஹஸ்பண்ட் சார் தான் செய்தார் என்று சொல்ல எல்லாரும் சந்தோசப்படுகின்றனர். 

மேலும் படிக்க | அண்ணா சீரியல்: சௌந்தரபாண்டிக்கு ஷண்முகம் வைத்த ஆப்பு.. முத்துப்பாண்டி செய்யும் சதி

அதனை தொடர்ந்து பார்வதி மாரிக்காக எடுத்து வந்த புடவையை கொடுத்து மாற்றி வர சொல்ல மாரி வெளியே போன சமயத்தில் சூர்யா மாரிக்கு இன்னைக்கு தான் உண்மையான பிறந்த நாளா என்பதெல்லாம் தெரியாது. தெய்வானை அவங்களோட உண்மையான அம்மா இல்ல, இதுவும் மாரிக்கு தெரியாது. 

அவங்க ஒருமுறை சென்னை வரும் போது விபத்து ஒன்று நடக்க அதில் மாரியின் அம்மா இறந்து போனதாக நினைத்து குழந்தையை தூக்கி சென்று வளர்த்ததாக சொல்கிறான். மேலும் மாரி அம்மா அப்பா இங்க தான் இருக்கனும், அவங்க யாருனு கண்டு பிடிக்கணும் என்று சொல்ல சங்கரபாண்டி தாரா ஆகியோர் இவ்வளவு நாளா ஒரு அனாதை கிட்டயா அடி வாங்கிட்டு இருந்தோம் என்று கடுப்பாகின்றனர். 

பிறகு மாரி உள்ளே வந்ததும் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட மாரி மட்டும் சாப்பிடாமல் இருக்க பார்வதி மாரியை பக்கத்தில் உட்கார வைத்து ஒரு அம்மாவாக சாப்பாடு ஊட்டி விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்க பிளான் போடும் சுரேஷ்! சந்தியா ராகம் எபிசோட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News