மாரி சீரியல்: சூர்யா, மாரியை பொறி வைத்து பிடித்தாரா.. அடுத்து நடக்கப் போவது என்ன?

மாரிக்கு எதிரே சென்று ஒருவன் இன்ஸ்பெக்டர் விக்ரமுக்கு ஹார்ட் அட்டாக் என்று சொல்லி பேச அவள் உண்மை என நினைத்து விக்ரம் வீட்டிற்கு ஓடி வருகிறாள். அங்கே ரவுடிகள் சிலர் மாரியை கடத்தி விடுகின்றனர்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 5, 2023, 02:45 PM IST
  • மாரி சீரியல் இன்றைய எபிசோட்
  • சூர்யா போட்ட கச்சிதமான பிளான்
  • பொறியில் சிக்கிய மாரி?
மாரி சீரியல்: சூர்யா, மாரியை பொறி வைத்து பிடித்தாரா.. அடுத்து நடக்கப் போவது என்ன? title=

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஸ்ரீஜா பரம்பரை நகையை திருடி கொண்டுபோய் தினேஷிடம் கொடுத்து விட்டு வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

ஸ்ரீஜா வீட்டுக்கு வரும்போது அங்கே போலீஸ் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். என்ன விஷயம் என்று விசாரிக்க நகை திருடுபோன விஷயம் பற்றி சொல்ல, எப்படி தப்பிப்பது என யோசிக்கிறாள். மறுபக்கம் பரம்பரை நகையை வாங்கிய தினேஷ் ஒரு அடகு கடைக்கு சென்று அவரிடம் நகையை கொடுத்து பத்து லட்சம் ரூபாய் பணத்தை கேட்டு வாங்கி வருகிறார். அதன் பிறகு மீண்டும் அங்கு வரும் ஸ்ரீஜா நகையை கேட்க, அவர்கள் அடகு வைத்து விட்டதாக சொல்ல உடனடியாக அந்த நகை தேவைப்படுகிறது என சொல்கிறாள். 

மேலும் படிக்க |  கொளுத்தி போட்ட புவனேஷ்வரி.. ட்விஸ்ட் கொடுத்த ரகுராம்: சந்தியா ராகம்

பிறகு தினேஷ் அடகு வச்ச சீட்டு இருக்கு இங்க போய் பணத்தை கொடுத்துட்டு நகையை மீட்டுக்கோங்க என்று சொல்ல வேறு வழியில்லாமல் அந்த சீட்டை வாங்கிக் கொண்டு செல்கிறாள். அடுத்து ஆபீஸில் அரவிந்த் தாரா மற்றும் ஸ்ரீஜா ஆகியோர் எப்படியாவது சரக்கு பிசினஸ் டீலை முடிக்க வேண்டும் என பிளான் போட்டுக் கொண்டிருக்கின்றனர். நாளைக்கு மீட்டிங் வச்சுக்கலாம் என்று பேச அதைக் கேட்கும் அப்துல் சூர்யா மற்றும் மாரியிடம் இந்த விஷயத்தை சொல்ல இருவரும் நாளைக்கு மீட்டிங் நடப்பதற்கு முன்பாக போய் அந்த டாக்குமெண்ட்டை எடுத்துவிடலாம் என்று பிளான் போடுகின்றனர்.

மறுநாள் காலையில் மாறி மற்றும் சூரியா ஆபீஸ்க்கு வர மாரி வெளியில் காத்திருக்க சூர்யா பின்பக்க வழியாக உள்ளே வந்து டாக்குமெண்ட்டை தேட தொடங்குகிறான். இது மாரி மற்றும் சூர்யாவை மடக்கி பிடிக்க தாரா டீம் திட்டம் என தெரிய வருகிறது. அடுத்ததாக மாரிக்கு எதிரே சென்று ஒருவன் இன்ஸ்பெக்டர் விக்ரமுக்கு ஹார்ட் அட்டாக் என்று சொல்லி பேச அவள் உண்மை என நினைத்து விக்ரம் வீட்டிற்கு ஓடி வருகிறாள். அங்கே ரவுடிகள் சிலர் மாரியை கடத்தி விடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க |  கோபமாக ஆபீஸ் வந்த தீபா.. சினேகாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News