“அந்த மாதிரி படமா எடுக்குறேன்” விஷால் புகாரல் ஆடிப்போன இந்திய சினிமா! என்ன நடந்தது?

Mark Antony Hero Vishal: 'சினிமாவில் ஊழல் இருக்கலாம். நிஜ வாழ்க்கையில் கூடாது' லஞ்சம் கேட்ட சென்சார் போர்டு அதிகாரிகள்.. அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த நடிகர் விஷால்.

Written by - Bhuvaneshwari P S | Edited by - Shiva Murugesan | Last Updated : Sep 29, 2023, 04:48 PM IST
  • தணிக்கை குழுவுக்கு 6 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் -விஷால் குற்றச்சாட்டு
  • சினிமாவில் ஊழல் இருக்கலாம். நிஜ வாழ்க்கையில் கூடாது - நடிகர் விஷால்
  • லஞ்சம் பெற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்
“அந்த மாதிரி படமா எடுக்குறேன்” விஷால் புகாரல் ஆடிப்போன இந்திய சினிமா! என்ன நடந்தது? title=

Vishal Latest News: மார்க் ஆண்டனியின் இந்தி டப்பிங்கிற்கு சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் வெளியிட்ட வீடியோ இந்திய சினிமாவையே உலுக்கியுள்ளது. தற்போது இவரது புகாருக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நடிகர் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கடந்த செப்டம்பர் 15ம் தேதி வெளியான மார்க் ஆண்டனி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், படத்தின் இந்தி வெளியீட்டுக்காக தணிக்கை குழு தரப்பிற்கு 6 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டிய சூழல் இருந்ததாக விஷால் பரபரப்பு குற்றச்சாட்டை தனது எக்ஸ் தளத்தில் நேற்று முன்வைத்தார். அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், "சினிமாவில் ஊழல் காட்டப்படலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் கூடாது என்றும் குறிப்பாக அரசு அலுவலகங்களில் ஊழல் கூடாது என்றும் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் வெளியிடுவதற்காக திரைப்பட தணிக்கை குழு ஆறரை லட்சம் ரூபாயை லஞ்சமாக பெற்றுள்ளதாகவும், படம் வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன்பு அணுகியதால், வேறு வழி இல்லாமல் பணத்தை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அவர் பேசினார். மேலும், தன்னிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளதாகவும், இந்த விவகாரத்தை மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் கூறினார்.

மேலும் படிக்க - “என்னை ஏமாத்திட்டாங்க..தொடர்ந்து கொலை மிரட்டல்..” பிரபல நடிகர் குமுறல்..!

நடிகர் விஷாலின் குற்றச்சாட்டை அடுத்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இன்று எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ஊழலை பொறுத்துக் கொள்ள முடியாது எனவும், இதில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்த மூத்த அதிகாரி மும்பைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் லஞ்சம் பெற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது, அதோடு இதுபோல வேறு யாராவது CBFC ஆல் பாதிக்கப்பட்டிருந்தால் புகாரை அனுப்புங்கள் என ஒரு இ-மெயில் முகவரியும் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த விவகாரம் சர்ச்சையானது அடுத்து பேட்டி அளித்த விஷால், நிச்சயம் தன்னைத் தொடர்ந்து பலர் புகார் அளிக்க முன்வருவார்கள் என்றும், தான் ஒன்னும் ஆபாச படத்தை எடுத்து அதற்கு சென்சார் சான்றிதழ் கேட்கவில்லை என்றும் காட்டமாக பேசியுள்ளார். மேலும், தன்னை நாடு முழுவதும் பிரபலப்படுத்திக் கொள்ள இந்த குற்றச்சாட்டை வெளிப்படுத்தவில்லை என்றும் அவர் விளக்கமளித்து உள்ளார்.

Mark Antony Hero Vishal:

மேலும் படிக்க - தமிழ்நாட்டின் டாப் 5 டிவி தொடர்கள்! எதிர்நீச்சல் சீரியலுக்கு எந்த இடம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News