அவமானப்படுத்திய ரங்கநாயகி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

Meenakshi Ponnunga: இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் வெற்றியும் ஷக்தியும் சேர்ந்து ரங்கநாயகி ப்ளான் அனைத்தையும் மாற்றிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  

Written by - RK Spark | Last Updated : Dec 14, 2023, 01:09 PM IST
  • மீனாட்சியை அவமானப்படுத்திய ரங்கநாயகி.
  • ஷக்தி கொடுத்த ஷாக்.
  • மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் அப்டேட்.
அவமானப்படுத்திய ரங்கநாயகி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்! title=

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில்  சக்தி சொன்ன புடவையே இருக்கட்டும் என்று முடிவெடுக்கிறாள். அந்த புடவையை பூஜா மேல் வைத்துப் பார்க்க ரங்கநாயகி முயலும்போது, சக்தி வந்து நிற்க, சக்தி மேல் ரங்கநாயகி வைத்துப் பார்க்கிறாள். ரங்கநாயகி அதிர்ச்சியாக, இதே போல் இந்த புடவையை நீங்களே எனக்கு சுமங்கலி பூஜை அன்னைக்கு வெச்சி கொடுப்பீங்க என்று ரங்கநாயகியிடம் சக்தி சவால் செய்கிறாள். 

மேலும் படிக்க | 73 வயது... உலகத்திற்கே சூப்பர்ஸ்டார்.. ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு?

mp

வீட்டுக்கு வரும் கேட்டரிங்க் காரனிடம் ரங்கநாயகி ஒரு மெனு கொடுக்க, அதை வெற்றி மாற்றுகிறான். பத்திரிகையை யாரு யாருக்கு அனுப்பவேண்டும் என்று ஒரு லிஸ்ட்டுடன் ரங்கநாயகி ரோஹித்திடம் சொல்ல, பத்திரிகையையும் அட்ரஸ் லிஸ்ட்டையும் சக்தி மாற்றுகிறாள். பேனர் டிசைனை ரங்கநாயகி செலக்ட் செய்ய, அதை வெற்றியும் சக்தியும் மாற்றுகிறார்கள்.  இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, சரண்யா வெளியே வந்தால், எல்லாரும் அசோக் எங்கே என்று கேட்பார்கள் என்பதால் அவளை வீட்டுக்குள்ளே இருக்கும்படி ரங்கநாயகி சொல்கிறாள். பூஜா சரண்யாவை ஒரு அறையில் போட்டு பூட்டி வைக்கிறாள்.

அடுத்து மீனாட்சி யமுனா மற்றும் துர்கா அங்கே வர, ரங்கநாயகி, நீதிமணி வர்ற வரை வெளியவே இருங்க என்று சொல்லி விடுகிறாள். பிறகு நீதிமணி புஷ்பாவுடன் வருகிறான். இதை பார்த்து மீனாட்சி அதிர்ச்சியாக, ரங்கநாயகி மீனாட்சியை பூடகமாக அவமானப்படுத்துகிறாள். உடன் சேர்ந்து புஷ்பாவும் அவமானப்படுத்த, அங்கே சக்தியும் வெற்றியும், மேள தாளத்துடன் கலர் ஜிகினா பறக்க பைக்கில் வருகிறார்கள். இதை பார்த்ததும் இவ எதுக்கு இங்க வருகிறாள் என்று ரங்கநாயகி அதிர்ச்சியாகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | பிக் பாஸில் இருந்து விலகும் கமல்? இவர்தான் அடுத்த தொகுப்பாளர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News