புதிய சாதனையை எட்டியது மெர்சல் டீசர்!!

Last Updated : Oct 15, 2017, 11:25 AM IST
புதிய சாதனையை எட்டியது மெர்சல் டீசர்!! title=

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இந்த படத்தில் சமந்தா, காஜல், நித்யா மேனன் என 3 நாயகிகள் நடித்துள்ளனர். மேலும் இப்படம் இன்னும் மூன்று நாட்களில் வெளியாகவுள்ளது. 

இந்த படத்தை தேனாண்டாள் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளாது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். பல சிக்கல்களை தாண்டி தற்போது மெரசல் தீபாவளிக்கு வெளியாகிறது.

இந்நிலையில் மெர்சல் படத்தின் டீசர் கடந்த மாதம் 21-ம் தேதி யு டியூபில் வெளியானது. டீசர் வெளியான சில மணி நேரங்களிலேயே பல புதிய சாதனைகளைப் படைத்தது. 

தொடர்ந்து மெர்சல் டீசரின் லைக்குகள் அதிகரித்துக் கொண்டேயிருந்தன. இப்போது 10 லட்சம் லைக்குகளைப் பெற்று, மேலும் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. 

இதுவரை மெர்சல் டீசருக்கு 2 கோடியே 87 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளது. இன்னும் 13 லட்சம் பார்வைகள் கிடைத்தால் 3 கோடி பார்வைகள் கிடைத்துவிடும்.

உலக அளவில் 10 லட்சம் லைக்குகளைத் தொட்ட முதல் திரைப்பட டீசர் என்ற பெருமை மெர்சல் டீசருக்குக் கிடைத்துள்ளது. 

Trending News