June 14 அன்று சுஷாந்த் சிங்கின் வீட்டில் காணப்பட்ட மர்மப் பெண் யார்? விடை தெரிந்தது!!

சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்த நாளான ஜூன் 14 அன்று, முகக்கவசம் அணிந்த பெண் ஒருவர், அவரது கட்டிடத்தில் சென்றதைக் காட்டும் பல படங்களும் வீடியோக்களும் ஆன்லைனில் வெளிவந்துள்ளன.

Written by - ZEE Bureau | Last Updated : Aug 17, 2020, 12:01 PM IST
  • சுஷாந்தின் வீட்டில் காணப்பட்ட அந்த மர்ம பெண் ரியா சக்ரவர்த்தியின் சகோதரர் ஷோவிக்கின் தோழி ஜமீலா என்பது தெரிய வந்துள்ளது.
  • சுஷாந்தின் மரணம் குறித்து அறிந்து ஜமீலா தனது மற்ற தோழிகளுடன் சுஷாந்தின் வீட்டிற்கு வந்தார்.
  • வீட்டு பணியாளர்களை சந்தித்த பின்னர் அந்த இடத்தை விட்டு அவர் வெளியேறிவிட்டார்.
June 14 அன்று சுஷாந்த் சிங்கின் வீட்டில் காணப்பட்ட மர்மப் பெண் யார்? விடை தெரிந்தது!!

புதுடில்லி: சுஷாந்த் சிங் ராஜ்புத் (Sushant Singh Rajput) இறந்த நாளான ஜூன் 14 அன்று, முகக்கவசம் அணிந்த பெண் ஒருவர், அவரது கட்டிடத்தில் சென்றதைக் காட்டும் பல படங்களும் வீடியோக்களும் ஆன்லைனில் வெளிவந்துள்ளன. இருப்பினும், அவர் யார் என்று அடையாளம் தெரியாமல் இருந்தது. இப்போது, ​​ சுஷாந்தின் வீட்டில் காணப்பட்ட அந்த மர்ம பெண் ரியா சக்ரவர்த்தியின் (Riya Chakraborty) சகோதரர் ஷோவிக்கின் தோழி ஜமீலா என்பது தெரியவந்துள்ளது.

சுஷாந்தின் மரணம் குறித்து அறிந்து ஜமீலா தனது மற்ற தோழி பிரியங்கா கெமானி மற்றும் மகேஷ் ஷெட்டி ஆகியோருடன் சுஷாந்தின் வீட்டிற்கு வந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அந்த இடத்தில் இருந்த போலீஸ் குழு அவரை நடிகரின் வீட்டிற்குள் நுழைய அனுமதிக்கவில்லை. மேலும் அவர் வீட்டு பணியாளர்களை சந்தித்த பின்னர் அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டார் என தெரிய வந்துள்ளது.

சுஷாந்த் மற்றும் ரியாவின் இன்ஸ்டாகிராம் அகௌண்டுகளில் உள்ள ஒரு குரூப் ஃபோட்டோவில், மற்ற சிலருடன் ஷோவிக் மற்றும் ஜமீலாவும் காணப்படுகிறார்கள்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Happiness is a warm gun ! #rheality gets #rheal #Repost @sushantsinghrajput with @get_repost ・・・ Picturesque memories :) @ #Orion Good morning everyone:) resonance 

A post shared by Rhea Chakraborty (@rhea_chakraborty) on

சுஷாந்தும் ரியாவும் காதல் உறவில் இருந்தனர். சுஷாந்தை தற்கொலைக்குத் தூண்டியதாக சுஷாந்தின் குடும்பத்தினர் ரியா மீது FIR பதிவு செய்துள்ளனர். ரியா, ஷோவிக் மற்றும் அவர்களது தந்தை இந்திரஜித் சக்ரவர்த்தி ஆகியோர் தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட பணமோசடி வழக்கிற்காக பல முறை அமலாக்க இயக்குநரகம் (ED) முன் ஆஜரானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: சுஷாந்திற்கு எந்த விஷயமும் கொடுக்கப்படவில்லை, பல மர்ம விஷயங்கள் வெளியீடு

ஜூன் 14 ஆம் தேதி சுஷாந்த் சிங் ராஜ்புத் அவரது வீட்டில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் ஒரு சில பாலிவுட் பிரபலங்களும் சுஷாந்த் வழக்கு குறித்து சிபிஐ விசாரணைக்கு கோரினர்.

மிகவும் துடிதுடிப்பான, வாழ்க்கை மீது அதிக பற்று மிக்க ஒரு நபராக அறியப்பட்ட சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார் என்பதை யாராலும் நம்ப முடியவில்லை. சுஷாந்தின் மரணம் குறித்த வழக்கு இன்னும் விசாரணைய்யில் உள்ளது. இந்த வழக்கில் நாளுக்கு நாள் பல புதிய திருப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. 

ALSO READ: மீண்டும் ED பிடியில் ரியா சக்ரவர்த்தி, சகோதரர் ஷோவிக்.....தந்தைக்கும் அழைப்பு

More Stories

Trending News