Kalaignarin Kanavu Illam Scheme: தமிழக அரசு ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. பள்ளி மாணவ, மாணவிகள் தொடங்கி, முதியோர் வரை அனைவருக்குமான புதிய திட்டங்களை தொடங்கி வருகின்றனர். அதில் ஒரு திட்டமாக கலைஞரின் கனவு இல்லம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சொந்த வீடு இல்லாத ஏழை குடும்பங்களுக்கு தரமான புதிய வீடுகளை கட்டுவதற்கு, சுமார் 3,500 கோடி ரூபாய்யை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளனர். ஒவ்வொரு வீட்டிற்கும் 3,50,000 ரூபாய் என்ற அடிப்படையில் 2024-25 ஆம் ஆண்டில் மொத்தம் 100,000 புதிய வீடுகளை கட்ட திட்டமிட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழக கிராமப்புறங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி சுமார் 8,00,000 குடிசை வீடுகள் இருப்பதை அரசு கண்டறிந்தது. இதனையடுத்து அடுத்த 6 ஆண்டுகளில் 8,00,000 புதிய வீடுகளை கட்டித்தர அரசு முடிவு செய்துள்ளது. 2030க்குள் இந்த பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளனர். இந்த ஆண்டு 100,000 வீடுகளை கட்டத் தொடங்கியுள்ளனர், இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு புதிய வீடும் சமையலறை மற்றும் ஒரு சிறிய வாழ்க்கை அறை உட்பட 360 சதுர அடி அளவில் இருக்கும்.
மக்கள் தங்கள் வீடுகளைக் கட்டும்போது பணத்தைச் சேமிக்க உதவுவதற்காக, TANCEM சார்பில் அவர்களுக்கு குறைந்த விலையில் சிமெண்ட் மற்றும் ஸ்டீல் கம்பிகள் வழங்கப்படுகிறது. வீடு கட்டுவதற்கான பணம் மக்களின் வங்கி கணக்கிற்கு நான்கு தவணைகளாக வழங்கப்படுகிறது. வீடு கட்ட தொடங்கும் போது கொஞ்சம் பணம், பின்னர் ஜன்னல்களை வைக்கும்போது கொஞ்சம் பணம், பின்னர் கூரை அமைக்கும் போது கொஞ்சம் பணம் மற்றும் வீடு கட்டி முடிந்ததும் கடைசி தொகை வழங்கப்படுகிறது.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு தமிழக அரசு 1,051.34 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. வீடுகள் எவ்வளவு தூரம் கட்டப்பட்டு வருகின்றன என்பதன் அடிப்படையில், பயனாளிகளுக்கு ஏற்கனவே 860.31 கோடி ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்கு தேவையான சிமென்ட் மற்றும் இரும்புக்காக 135.30 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை கலைஞர் கனவு மாளிகை திட்டத்திற்கு 995.61 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டம் ஏழை எளிய மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. சுமார் 100,000 வீடுகள் விரைவாக கட்டப்பட்டு வருகின்றன. இதனால் வீடுகளை விரைவாக கட்ட தமிழக அரசு கூடுதலாக 400 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மொத்தம், 1451.34 கோடி ரூபாய் வழங்கியுள்ள நிலையில், கட்டுமானப் பணிகள் எவ்வளவு தூரம் உள்ளது என்ற அடிப்படையில், பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து வீடுகளையும் முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ