வெள்ளித்திரையில் கால் பதித்த நாகினி நாயகி மௌனி ராய்!

தமிழக இளசுகளையும் சீரியல் பாக்க வைத்த பெருமை ‘நாகினி’ தொடருக்கே உண்டு!

Updated: Jun 13, 2018, 02:20 PM IST
வெள்ளித்திரையில் கால் பதித்த நாகினி நாயகி மௌனி ராய்!

தமிழக இளசுகளையும் சீரியல் பாக்க வைத்த பெருமை ‘நாகினி’ தொடருக்கே உண்டு!

வடமொழி தொலைக்காட்சி தொடர்கள் தமிழகத்தில் காலடி எடுத்துவைத்தப் போதிலும், அத்தனை தொடர்களிடம் இருந்து தனி அடையாளம் பதித்த நாகினி தொடர். 

இந்த தொடரில் நாயகியாக நடித்த மௌனி ராய் மற்றம் ஆதா கான் நாடுமுழுவதிலும் இருக்கும் இளைஞர்களை காட்டிலும் தமிழக இளைஞர்களிடையே பெரும் ரசிகர் பட்டாளத்தினை பெற்றனர். தமிழில் ஒரு பாகம் மட்டுமே வெளியான இத்தொடரின் மூலம் பிரபலமான இவர்கள் இந்தி தொடர்களில் 2 பாகங்களிலும் நடித்துள்ளனர்.

இந்த நாகினி தொடரின் இரண்டு பாகங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது அதன் அடுத்த பாகத்தினை இத்தொடரின் குழுவினர் துவங்கியுள்ளனர். ஆனால் முந்தைய நாயகிகளுக்கு பதிலாக அனிதா, சுரூபி ஜோதி மற்றும் கரிஷ்மா என்னும் மூன்று நாயகிகள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் ரசிகர்களை கவர்ந்த மௌனி ராய் பாலிவுட் திரைப்படங்களில் கால்பதித்தார். முன்னதாக அக்ஷய் குமாரின் கோல் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான இவர், தற்போது 'RAW: Romeo Akbar Walter' என்னும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாகினி தொடரில் இவரை இழந்த போதிலும் மீண்டும் வெள்ளித்திரையில் இவரை பார்க்கவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.